பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

43

இங்ஙனம் தடுத்தவர்கள் சிந்தனையாளர் அல்லர். சிந்திக்காதவரும் அல்லர். இடைப்பட்ட இனத்தவர், தம்மைப் பற்றிச் சிந்திப்பவர்கள்!

சிந்தனையாளர் தமக்கெனச் சிந்திக்காது மனித இனத்துக் காகச் சிந்தித்தனர். மனித இன வாழ்வை வளப்படுத்தவே சிந்தித்தனர். சிந்தியாதவர்களோ சிந்தனைச் செல்வத்தின் பக்கமே செல்லவில்லை. இந்நிலையில் அந்தச் சிந்தனைச் செல்வம் சிந்தனையாளராகிய சிறுபான்மை நல்லோரை வளர்க்கவும் பயன்படவில்லை. நல்லோர் மரபைப் பெருக்கவும் பயன்பட வில்லை.அச்சிந்தனைச் செல்வத்துக்குரிய பெரும்பான்மையினரை வளர்க்கவும் அவர்களிடையே சிந்தனையைப் பரப்பவும் பயன்படவில்லை. இடையே தற்சிந்தனையாளர்கள் அதைத் தட்டிப் பறித்துக்கொள்கின்றனர்.மனித இனத்துக்கென நல் அறிவாளிகள் வகுத்த செல்வத்தைத் தம் மூட மதியளவில், அழிவுச் சிந்தனையில் நிறுத்திக்கொள்கின்றனர், இவர்கள்!

சமுதாயத்தை ஆளும் இனம் மனித இனத்தின் பிரதிநிதி களிடமிருந்து அந்தப் பிரதிநிதித்துவத்தைப் பறித்து-சமுதாயத்தின் தந்தையர்களுக்கும் உரிமைச் செல்வர்களுக்கும் இடைநின்ற நோயாய், மனித இனப்பகையாய் வளர்கின்றது!

சமுதாயத்தின், இனத்தின் கால இடம் கடந்த இயற்கை யளாவிய குறிக்கோள், கடவுள் பண்பு! அதன் பெயரால் மக் களிடையே எழுந்த ஒற்றுமை ஆற்றல், உணர்ச்சியாற்றல், தன்மறுப்பாற்றல் பெரிது! மிகப் பெரிது! அதை அரும்பாடுபட்டு ஆக்கிய நல்லோர்கள் வாழ்க்கைச் சிந்தனையாளர்களாகிய அருட் பெரியோர்கள் மரபு வளர்க்க அது சிறிதும் உதவாமல், அவ் வாக்கத்தால் வளர்தற்குரிய இனச் செல்வர்களுக்கும் அது பயன்படாமல், இரண்டையும் தம் அறியாமையால் அழித்துத் தம் மரபையே துடைத்துத் தூர்த்துவரும் சூழ்ச்சியறிவே கொண்ட மூடப் புரோகிதர் ஆட்சிக்கு அது பலியாகியுள்ளது; பலியாகி வருகிறது!

சமுதாயத்தின் வலுவுக்காக அமைக்கப்பட்ட அரசியல், அதன் வளம் பெருக்க வேண்டிய பொருளியல் - வலிமை தர உதவி செய்து, அதற்காக உயிர் கொடுக்கும் வீரர் வளமும் பெருக்காமல், வளம் பெருக்க உதவி செய்து அதனால் வள மிழக்கும்