பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் – 18

தொழிலாளர் இனமும் வளர்க்காமல் வலுக் கேட்டுக்கும் வறுமைக்கும் வழிவகுக்கும் கல்லாக் குருடர் - முதலாளி வகுப்பு, தன்னல அறிவு வகுப்பின் கையாட்சியில் சிக்கியுள்ளது! சீரழிந்து சீரழிவு பெருக்குகின்றது!

பெரும்பான்மையினர் அவலநிலை, சிந்தனையற்ற அவல நிலைக்குப் பொறுப்பாளிகள் சமுதாய, சமய, அரசியல் ஆட்சியாளர்களே மக்கட் குறிக்கோளைக் கெடுத்து அதைத் தம் குறிக்கோளாக ஆக்கிக்கொண்ட ஆட்சி வகுப்பே - இதை வள்ளுவர் சுட்டிக் காட்டி வினா எழுப்பியுள்ளார்! வினாவுக்கு விடையும் குறித்துக் காட்டியுள்ளார்!

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின். பரந்து கெடுக உலகியற்றி யான்!’

மனிதன் இரந்து உயிர்வாழ வேண்டுமா?

அந்நிலை இருக்கலாமா?

து அவர் எழுப்பிய வினா!

அந்நிலை அன்று இருந்தது, இன்றும் இருக்கிறது.

கூடக்

அந் நிலை இன்னும் வளர்ந்து வருகிறது என் கூறலாம். ஏனென்றால், வள்ளுவர் மரபில் நின்று வினா று எழுப்புபவரும் அரியராய் வருகின்றனர்!

வரானாலும், அரசியலை

‘இந்நிலைக்குக் காரணமானவர் யாரானாலும், சமூகத்தை ஆட்கொண்டவரானாலும், சமயத்தை ஆட் கொண்ட ஆட்கொண்ட வரானாலும், நல்லுலகப் போர்வையில் அல்லுலகம் இயற்றிவரும் அவர்கள் அழியவேண்டியவர்கள்! அவர்கள் அழியட்டும்!' என்று சினந்து எழுகின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் சினம் உலகின் சினமாதல் வேண்டும். உலக மக்கள் அறிவுப் புரட்சியாதல் வேண்டும். அக்காலம் முதல் இக்காலம்வரை நிலவிவரும் அவல நிலை ஒழிதல் வேண்டும்.

இந்நிலைமை தானாக ஒழியவில்லையானால், ஒழிக்கப் படுதல் வேண்டும்! இதுவே புதிர்க்கு, வினாவுக்கு வள்ளுவர் அளித்த, அளிக்கும் விடை!