பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

45

இயற்கை இந்த நிலையை அழிப்பது உறுதி. ஆனால், இயற்கை அழிக்கு முன், மனித இனம் கிளர்ந்தெழுந்து அழிப்பது நலம். ஏனெனில், இயற்கையின் அழிவு இரக்கமற்ற அழிவு, குருட்டழிவாயிருக்கும். அது தெய்வீக அழிவு ஆகாது. மனித இனம் தீமையழித்து நன்மை பெருக்கும் தெய்வீக அழிவை உருவாக்குதல் வேண்டும்.

மனித இனத்தின் சீரழிவு

உணவு, உடை, உறையுள்! மனித இனத்துக்குரிய முப்பெருந் தேவைகள்! இவற்றுள் விலங்குகளுக்கும் உயிரினங்களுக்கும் ஒரே ஒரு தேவை குறைவு. உடைத் தேவை அவற்றுக்கு இல்லை. உணவு, உறையுள் தேவையே உண்டு. ஆனால், இவை பற்றிய கவலை, திண்டாட்டம் விலங்கு, பறவைகளுக்குக் கிடையாது. மனிதற்கே உண்டு. மனித இனத்துக்கே உண்டு.

விலங்கு, பறவையினங்களில் அவற்றவற்றின் உணவு உறையுள்களுக்கு அவையவையே முயற்சி செய்கின்றன. அவற்றவற்றின் குடும்ப மரபை அவையவையே பேணுகின்றன. இதனால், எல்லா உயிரினங்களுக்கும் உழைப்பு, ஓய்வு, சிந்தனை வாய்ப்புக் கிடைக்கின்றன. சரிசம அளவிலேயேகிடைக்கின்றன. மனித இனத்தில் தூர தொலைக்கனவாய் இன்னும் இருந்துவரும் பொதுவுடைமை வாழ்வின் பண்பு, இயற்கையளித்த பண்பாகவே விலங்கு, பறவை, புழுப்பூச்சிகளுக்கெல்லாம் கிடைத்துள்ளன!

உழைப்புக்கு மட்டும் உரிய உழைப்புவகுப்பு, அறிவுக்கு மட்டும் உரிய அறிவுவகுப்பு, ஓய்வுக்கு மட்டும் உரிய ஓய்வுவகுப்பு என்ற அழிவுப் பிரிவினை விலங்கு, பறவைகளிடையே கிடையாது. மனித இனத்துக்கு வெளியே அவற்றைப் பார்த்தல் வேண்டு மானால், நச்சு விலங்குகளை, நச்சு உயிரினங்களைக்கூட விட்டுவிட்டு, நச்சுப்பூச்சியினங்களுக்கே செல்லுதல் வேண்டும்!

இன்ப வாய்ப்பு, சிந்தனை வாய்ப்பு இரண்டிலும் சரிசம நிலை, விலங்கினத்தில் இருக்கும் அளவுகூட மனித இனத்தில் இல்லை; விலங்கினத்தில் உள்ள நிலையினும் மனித இனத்தில் வரவரக் குறைந்தே வருகிறது. ஆயிரத்திலொன்று பதினாயிரத்தி லொன்று விழுக்காடுகூடத் தேறாத இன அறிஞர் மரபு எப்படியோ நிலைமையைச் சமாளித்து வருகிறதேயன்றி, அதுவும்

று