பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் – 18

தான் அழிந்து மனித இனத்தை வளர்த்து வருகிறதேயன்றி, இன்று உலகிலுள்ள மூன்று அழிவு வகுப்புகளும் - தற்சிந்தனை அறிவு வகுப்பு, சிந்தனையும் இன்ப உணர்வும் உழைப்புப் பங்கும் அற்ற ஓய்வு வகுப்பு, இன்ப வாய்ப்போ சிந்தனை வாய்ப்போ சிறிதுமற்ற பெரும்பான்மை உழைப்பு வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளும் - இன வாழ்வின் உயர்நிலையிலிருந்து விலகியே வாழ்கின்றன.

இந்நிலையில்தான் மனித இனத்தின் பெரும்பான்மை உழைப்பு வகுப்பு வீணே விழலுக்கிறைத்த நீராக உழைத்துக் குப்பைவளம் பெருக்குகிறது. அந்த உழைப்பு வாய்ப்பில்கூட ஏழை வகுப்பில் மிகப்பெரும்பான்மையினர்க்குப் பங்கு கிடைப்பதில்லை-வர வர அவ்வாய்ப்பு ன்றைய போலி நாகரிகத்தில் பறிக்கப்பட்டு வருகிறது. உணவு, உடை, உறையுளுக்கு உழைக்கும் வகுப்பினர்க்கு, அவ்வுழைப்பும் கிடையாத ஏழை அகதி வகுப்பினர்க்கு, அவர்கள் உழைப்புக்குரிய அம்மூன்றும் சரிவரக்கிடைப்பதில்லை. மிகப் பலர் உணவு, உடை, உறையுள் மூன்றுக்கும் அங்கலாய்க்கின்றனர்! ஆலாய்ப் பறக்கின்றனர்!!

பசி பட்டினியுடன், நோய் நொடி மூப்புச் சாக்காடுகளுடன் அவர்கள் அழிவுப் போராடுகின்றனர். இன்றியமையாத் தேவைகள் இல்லாமல், போதாமல், இருந்தும் பயன்படாமல், உயிர் சுமந்த பிணங்களாக அவர்கள் உழலுகின்றனர். உயிருடன் இயங்குவது எப்படி என்னும் கவலை அவர்களைப் பிடித்தாட்டு கிறது. உயி உயிருடன் உடம்பை ஒட்டவைக்கவும் முடியாமல், உயிரிலிருந்து உடம்பை விடுவிக்கவும் வகை தெரியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர்!

உலகில் நீதியும் ஆன்மார்த்த நீதிகளும்

உழைப்பு வகுப்பினும் கடைப்பட்ட வகுப்பு, அகதி வகுப்பு- மனித நாகரிகத்தையே எட்டிப் பார்க்க முடியாத, அதுபற்றிக் கேள்விப்பட முடியாத, அதன் வாடையை முகர்ந்து பார்க்க முடியாத வகுப்பு! மனிதநீதி சென்று எட்டாத, அருட்பெரியார்கள், நீதிமான்கள் சிந்தனைகூடச் சென்று பரவாத வகுப்பு!

பல

புழுக்கள்போல் ஊர்ந்து நெளிந்து மாள்கின்றனர் அவர்களுள் பலர் - மனித இனத்தின் புழுக்கள் அவர்கள்! மனித