பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

47

இனம், மனித இனத்தின் நீதிமான்கள் அவர்கள் நிலைபற்றிக் கேள்வி கேட்டதில்லை, கேட்பதில்லை!

மனித இனத்தில் புழுக்கள் ஏன்? இயற்கைப் படைப்பில் மனிதராகிவிட்ட பின்னும் மனித சமுதாயப் படைப்பில் அவர்கள் மீண்டும் புழுக்களாவானேன்? எவரும் இதைச் சிந்தித்ததில்லை, சிந்திப்பதில்லை!

மனிதப் புழுக்கள் மனித இனத்தில் அழுக்கேற்றுகின்றன; மாசுபடிவிக்கின்றன; கறை படர்விக்கின்றன! இதற்கு மனித இன மருத்துவர் தரும் மருந்து, நீதி போதனை 'அழுக்குத் தீது, அழுக்ககற்றுங்கள்' என்ற அறிவுரை!

-

வள்ளுவர் நீதியல்ல இது! செந்தாமரைப் பூவுடன் பூவாகத் தரப்படும் ஊமத்தம் பூபோல, வள்ளுவர் நீதியுடன் நீதியாக மனித இனத்தின் முன் காட்டப்படும் நீதி நூல்கள் தரும் மருந்து இது!

எல்லாப் புழுக்களும் புழுக்களாகவே ஊர்ந்து நெளிந்து மாண்டு விடுமா? சில புழுக்கள் பறக்கின்றன. மொய்க்கின்றன, கொசுக்களாக! சில கொட்டுகின்றன; குருதி குடிக்கின்றன; மூட்டைகளாக!

இவர்கள் கீழோர், கயவர்!

உழவரைக் குறித்ததாகக் கம்பர் காலமுதல் வழங்கும் தமிழ்ச் சொல் ‘கடையர்'. 'பொதுவர்', 'பொதுமகள்'. 'பொதுமக்கள்' வேளாண்மையாற்றிய வேளாளர் மரபுப் பெண்டிரைக் குறிக்கும். 'வெள்ளாட்டியர்' 'வெள்ளாட்டி மக்கள்'. பழைய பாணர், பாடகர், பொருநர், கூத்தர், விறலியர் மரபின் பெண்டிரைக் குறித்த 'கூத்தியர், இவற்றுக்கிணையான சமற்கிருதச் சொற்கள் (தாசர், தாசி மக்கள், சூத்திரர்), உழவரைக் குறித்த பழைய ஆங்கிலச் சொல் (பொறுக்கிப் பயல்; பழைய ஆங்கிலம்-உழவன்)

வை இந்தப் படிநிலைக்கு இழிவுறுத்தப்பட்ட அகதி வகுப்பினர்க்கு மனித உலக மொழிகள், மனித உலக இலக்கியம் வழங்கும் பரிசுகள்!

பழிகளுக்கெல்லாம் படைப்புக் கடவுள், வறுமை! பழியற்றவிடத்துப் பழிகளைப் படைத்தீனும் தாய், சிறு