பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் – 18

பழிகளைப் பெரும் பழிகளாக வளர்க்கும் செவிலி, செல்வர் பழிகளைத் தண்டிக்காது, கண்டிக்காது, காணாதுவிட்டு, அகதி வகுப்பின் பழிகளை நுண்ணாடி முதலிய கண்ணாடிகளிட்டுப் பார்த்துப் பழிவாங்கும் மனித நீதிக்கடவுள் அது!

கொசுக்கள், மூட்டைகளாக வளர்ந்த மனிதப் புழுவினத்தில் ஒரு சில தேள்கள், நட்டுவக்காலிகள், பாம்புகளாக வளர்கின்றன.

உயிருடன் இயங்குவது எப்படி? இந்தக் கவலை ஊட்டிய சிந்தனை அவர்களிடம், 'கடி, கொட்டு, குருதி உறிஞ்சு' என்ற அறிவுரையைத்தான் தந்துள்ளது! கீழுலக அறிவுரை அது! அதைப் பின்பற்றிக் கடிக்கின்றன, கொட்டுகின்றன, குருதி உறிஞ்சுகின்றன அவை!

நீதிமான்கள், உலகியல் அறிவுடையாளர்கள் இப்போது உரக்கக் கூவுகின்றனர்!

நீதிமான்கள் விட்டதைச் சமயப்போதகர்கள் எடுத்துரைக் கின்றனர்! பரணி பாடுகின்றனர்!

சமயப்போதகர்கள் விட்டதைச் சட்டக் கனதனவான்கள்

சாதிக்கின்றனர்!

வாழக் குற்றம் செய்தால், தண்டனை சாவு!

வாழ வழியின்றி மாள நினைத்தால், தண்டனை!

மாளாத மாள்வு!

'படு, படு,படவேண்டியதைப் படு! அஃது உன் ஊழ்! உனக்கு கடவுள் அளிக்கும் வரம்! ஆகவே, சாகாதே வாழாதே! உனக்காக வாழாதே, எங்களுக்காக வாழ்! உனக்காகச் சாகாதே, எங்களுக்காகச் செத்தொழி!'

சட்டம் தரும் போதனை இது!

வஞ்சனை, சூது, கொலை! இஃது அகதி வகுப்பினரிடம் உண்டு-உண்டு -உண்டு பண்ணப்பட்டவை இவை! இதை ஆளும் வகுப்பினர் பயன்படுத்தலாம்! போரில் கொலை, வீரம்! அரசியலில் கொலை, சூழ்ச்சி! வாழ்வில் வஞ்சனை, அஃது இன்பக்