பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

49

கேளிக்கை! ஆனால், இவற்றை ஆளும் வகுப்புக்காகச் செய்யட்டும், செய்து தண்டனையைத் தாம் அடையட்டும்! ஆளும் வகுப்பினர்க்குத் தேவையான அளவும் வாழட்டும், தாழட்டும்! அதன்பின் மாளட்டும்! ஆனால், தமக்கென அவர்கள் இத்தீமையைச் செய்யப்படாது! செய்தால், தண்டனை அவர்கள் பிறப்புரிமை!

சமுதாயச் சிந்தனைப் போர்வையில் நீதிப் போர்வையில் பொருளியல் தத்துவப் போர்வையில், சமயப் போர்வையிலேயே எவனாவது இவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க நினைத்தால், 'பேசாதே! சிந்திக்காதே! கண்ணைத் திறந்து பாராதே!' என்ற உறுக்கு!

வள்ளுவர் கேள்வி எழுப்பினார், இந்நிலையில் வாழ்ந்து வளர்ந்துவரும் மனித சமுதாயத்தில்! விடை சுட்டிக் காட்டினார், இத்தகைய நீதிமான்கள் கூடமகிழ! அவர் நூலும் புகழும் இன்னும் நின்று நிலவவும் செய்கிறது! தர்மம் தழைக்கும் பாரதத்தில் அதற்கு இன்றும் இடம் இருக்கிறது! தமிழ்ப் பண்பு செய்த தவம் இது!

'இரந்தும்!' இந்த 'உம்'மையில் மறைந்துள்ள வள்ளுவர் பெருமான் உள்ளத்தின் சிந்தனையை யாரே அறிவார்!.

இரத்தலைப் பற்றி மட்டும் சொன்னார், மற்றவற்றைச் சொல்லவில்லை தாம் கூறுவது 'நீதிமான் போர்வை'யில் என்பதை அவர் அறிவார். ஆனால், இரத்தல் நீதிமான்கள் நீதியில் குற்றமன்று. வள்ளுவரோ அதுதான் குற்றங்கள் அனைத்தும் கடந்த குற்றம், பழியாளர் பழிகள் கடந்த கயமைப் பண்பு என்று முன்பே வகுத்துக் கொண்டார்!

இது!

வள்ளுவரின் உம்மை தரும் பொருள் வளம், பண்பு வளம்

பண்பு: இனங் கடந்த சிந்தனை

தன்னலம் கடந்த சிந்தனையே பண்பு. ஆனால், அதுவே உண்மையறிவுமாகும். ஏனெனில், தன்னலங் கடந்த சிந்தனையே நீடித்துத் தன்னைப் பேண வல்லது; வளர்க்கவல்லது. இதுபோலக் குடும்ப எல்லை கடந்த சிந்தனையே குடும்பப் பண்பு.