பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் – 18

அது குடும்பம் வளர்க்கும். சமுதாய எல்லை, தலைமுறை எல்லை, இன எல்லை, மனித இன எல்லை ஆகியவற்றின் வகையிலும் இந்த உண்மை வளமுடைய உண்மையேயாகும்.

6

அரசியல் துறையில், வாழ்க்கைத் துறையில் இதன் வலுவைக் காணலாம். பிற நாடுகளை அடக்கியாளும் ாதிபத்திய நாடு தன் நாட்டெல்லையில் உண்மைக் குடியாட்சி பேண முடியுமா? முடியாது என்று காண்பது அரிதன்று. பிற நாடுகளிலிருந்து பறித்த வளம் ஏகாதிபத்திய நாட்டுக் குடிமக்கள் வறுமைப் பசியைச் சிறிது ஆற்றும். அவர்கள் நன்றியுணர்வு ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கத் தூண்டும். தம் உரிமையை வற்புறுத்தத் தூண்டாது. உரிமைப் பேச்சு எழுந்தாலும், மக்கள் மனச்சான்றே அவர்களைக் குத்திக்காட்டும். நன்றியுணர்வு பிழைக்கும் மதியாகி, மீண்டும் தன்னல எண்ணமே எழுப்பும். ஏகாதிபத்தியத்தால், நாடுகளிடை உயர்வு தாழ்வால்தானே நாம் நலம் பெறுகிறோம். அப்படியிருக்க, இந்நாட்டுக்குள் உயர்வு தாழ்வைச் சிறிது பொறுத்தாலென்ன? என்ற அறிவுரையைக்கூட மக்கள் தற்காலிக மனச்சான்று அளிக்கக்கூடும்.

நண்பரிடம் அன்புடையவனாக, ஆதரவுடையவனாக, விட்டுக்கொடுப் புடையவனாக இருப்பது மனித இயல்பு. அயலாரிடம் அம்முறையில் நடந்து கொள்வது நாகரிகம். ஆனால், உண்மை அதுவன்று. நண்பர் சூழலுக்கு வெளியே, தன்னலச் சூழலுக்கு வெளியே, பகைவரிடம் அவ்வாறு நடந்து கொள்வதுதான் பண்பு, சால்பு என்று அவர் கருதுகிறார்.

இயேசு பெருமானைப்போல, பகைவர் தீமை செய்தால் மாறாக நன்மை செய் என்று வள்ளுவர்பிரான் கூறியதன் அருள்நெறி உயர்வைத்தான் பலர் அறிந்துள்ளனர். ஆனால் இயேசுவுக்கோ, வள்ளுவர்க்கோ அவை அருள் நெறி உயர்வன்று. அவையே பண்பு.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’

என்ற குறட்பாவில் அவர் இப் பண்பிலாதார்க்கு அதை ஓர் அறிவுரையாகவே கூறுகிறார் என்று காணலாம். ‘தீமைக்குப்