பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

51

பழிவாங்க, தண்டிக்கத்தானேயப்பா விரும்புகிறாய்! நன்மை செய்துவிடு. அதைவிடச் சிறந்த தண்டனை இல்லை' என்கிறார். ஆனால், இயேசுபிரான் உயர் உள்ளத்தையும் வள்ளுவர் பெருமான் உயர் உள்ளத்தையும் வேறு இரு வாசகங்கள் சுட்டுகின்றன.

‘உன் எதிரியை நேசி' (Love they enemy)

என்றார் இயேசு.வள்ளுவர்,

'இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு!

என்று நயமாகப் பண்பு, சால்பு ஆகியவற்றின் மெய்ம்மையை அறிவுறுத்துகிறார்.

என்

மனைவியிடம் கணவன் தன் அன்புபற்றிப் பலபடப் பேசுகிறான். குழந்தையிடம் தந்தை தன் பாசம் பற்றிப் பேசுகிறான். மனைவியும் குழந்தையும் அந்தப் பேச்சில் மகிழ்கிறார்கள். அச்சமயம் ஒரு வேலையாள் 'என் மனைவிக்குத் தலைவலி. சிறிது ஓய்வு கொடுங்கள்' என்று கேட்கிறான். அல்லது குழந்தைக்குப் பூ என்றால் உயிர். தோட்டத்தில் கொஞ்சம் பூ பறித்துக் கொள்ளவா?' என்று கேட்கிறான். உண்மையில் மனைவி கண்டு மகிழ, குழந்தை கண்டுணர, கணவன், தந்தை பாசத்தைக் காட்டத்தக்க இடம் இதுவல்லவா? நல்ல கணவன் தன் மனைவியிடம் பாசம் காட்டுபவன் மட்டுமல்லன், அதைப் பிறரிடம் போற்றுபவனே! நல்ல தந்தை தன் பிள்ளையிடம் கொஞ்சுபவன் மட்டுமல்லன், அதைப் பிறரிடம் கண்டு மகிழ்பவனே! இது போலவே நண்பனிடம் நட்புடையவன், அதை மெய்ப்பிக்க வேண்டிய இடம் நட்பிலன்று. பகைமையிலேயே! ஏனெனில், நண்பனிடம் மட்டும் காட்டினால், நண்பன் பகைவ னாகின்றான்; அல்லது பகைவனாகத் தோற்றுகின்ற காலத்தில் அது மறைந்து தன் மெய்யுருக் காட்டிவிடும். பகைவனிடம் காட்டினாலோ, பகைவன் நண்பனானபோது, அது நட்பின் உண்மைப் பெருமையையே, பீடினையே காட்டுவதாகும்!

வள்ளுவரின் இக்கருத்தையே பாரதியாரின் 'பகைவனுக் கருள்வாய்!' என்ற வேண்டுதல் எதிரொலிக்கின்றது.