பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

53

எம்மொழியிலும் காணமுடியாது. காடை கவுதாரிகளைக் கூண்டிலடைப்பதைக்கூடக் கண்டித்து, அது மனிதரைச் சிறையிலடைக்கும் தீவினையுடன் ஒக்கும் என்று நாலடி யாசிரியர்கள் கூறுகின்றனர்.

மற்றும் ‘ஊனைத் தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே’ என்ற இனியவை நாற்பதும், பிற்காலப் புத்தர்களின் நடவடிக்கை களைக் கண்டிப்பதோ என்று கருதும்படி வள்ளுவர் பெருமான்,

'தினற் பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும் விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்'

என்றதும் காணலாம்.

ஆனால், திருக்குறள் ஒன்றிலேயே புத்தர் பெருமான், மகாவீரர் கோட் பாடுகளின் வேர் மூலத்தையும், அதன் பண்பு விளக்கத்தையும் காணமுடியும்!

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க. தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை'

இக் குறட்பாவில் காணப்படும் உயிர் ஒப்புரவு, தன் மறுப்புப் பண்பு வேறு; புத்தர், மகாவீரர் அருளிரக்கப் பண்பு வேறு என்பதை அறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சர் உலகக் கண்ணோட்டத்துடன் கண்டு விளக்கியுள்ளார்.

தமிழ்ப் பண்பின் தண்ணொளி உலகெலாம் பரவி ஒளி வீசிய காலத்தவர் வள்ளுவர். அதன் பண்பொளி மாசு படிந்த பனியிடையே சுடரிடும் பிற்காலத்தவர்கள், புத்தர், மகாவீரர் என்பதை இக் குறட்பாக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

புத்தர், மகாவீரர் காலத்துக்குத் திருவள்ளுவர் பிற்பட்டவர் என்ற தற்காலக் கருத்து, வருங்கால ஆராய்ச்சிகளால் களைந்த கற்றத்தக்கது என்று கூறலாம்! உலக சமயங்களெல்லாவற்றுக்கும் மூலமுதல்வர் வள்ளுவரே என்ற அறிஞர் ஷ்வைட்சரின் வாய்திறவா ஐயுறவு அன்று உறுதிப்படலாகும்.

உயிரின ஒப்புரவு

வள்ளுவரின் 'கொல்லாமைப் பண்பு' புத்த சமணரின் ‘அருளிரக்க' நெறியன்று. அது மேலையுலகப் பொதுவுடைமை