பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் – 18

வாதிகள் ன்னும் கனவு காணாத, விளக்கம் காணாத பொதுவுடைமைக் கோட்பாடு கடந்த பொதுவுடைமைப் பண்பு ஆகும். அதுவே மனித இனப் பண்பின் வேர்முதல்; உயிர் ஒப்புரவுப் பண்பின் விளக்கம்!

நாடு கடந்து ஏகாதிபத்தியம் பேணும் ஆட்சி குடியாட்சியை யும் அதே மூச்சில் பேண முடியாது.குடியாட்சியை வலியுறுத்திக் கோரும் பண்பும் அதன் குடி மக்களிடம் வளர வழியிராது. குடும்பம் கடந்து பேண முடியாத குடும்பப் பண்பு, குடும்பத் தினுள்ளும் தழைக்க இயலாது. அதுபோலவே, மனித இனம் கடந்து செல்லாத எந்த மனிதப் பண்பும் மனித இனத்துக்குள்ளும் வேரூன்ற மாட்டாது.

அறிவில் மேம்பட்ட மனித இனம் உயிரினங்களின் உரிமைகளை மதிக்காதவரை, மனித இனத்திலே மனிதர், மனிதர் உரிமையை மதிக்க மாட்டார்கள். ஏ னெனில், இரண்டிலும் பின்பற்றப்படும் பண்பு ஒன்றே!

பண்பால் உயர்ந்த மனித இனமே விலங்குகள் உரிமை களைத் தட்டிப் பறிக்கிறது. விலங்கின நிலையிலுள்ள மனிதர் களையும் அதேபண்பு தட்டிப் பறிக்காமல் என்ன செய்யும்?

நாட்டெல்லையில் ஓர் ஏகாதிபத்தியம் தன் ஏகாதிபத்திய உடுப்பைக் கழற்றிவைக்க முடியாதபோது, மனித இன எல்லையில் மட்டும் மனிதப் பண்பு தன் சட்டையை மாற்றிக்கொண்டு நுழையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

மாட்டின் கழுத்தையும், ஆட்டின் கழுத்தையும் பதம் பார்க்கும் கத்தி, மனிதரை எண்ணியவுடன் மழுங்கிவிடுமா?

'இயற்கை நடப்பு’, ‘கடவுள் அமைப்பு' என்ற விளக்கங்கள் உயிரினக் கொலைகளுக்குச் சமயவாதிகள் சிலரால் தரப்படு கின்றன. ஆம்; அதே தொடர்கள்தாம் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அருகில் சென்று வீற்றிருக்கும் சமயவாதமும், மனிதர் வகையில், தொழிலாளர் இன வகையில் அளிக்கிறது என்பதைப் பலர் கவனிப்பதில்லை.

வள்ளுவர் இக்கருத்தைக் கூறுவது பலர்க்கு வியப்பைத் தரலாம். நாம் திருக்குறளை வாசிக்கும்போது போட்டுக் கொண்டு பார்க்கும் இக்காலக் கண்ணாடியின் செயல் அது.