பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

'கொலை வினைய ராகிய மாக்கள், புலை வினையர் புன்மை தெரிவார் அகத்து’

55

இதற்குப் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள் தரும் தெளிவுரையை அப்படியே கீழே தருகிறோம்.

'கொலைத் தொழிலினராகிய மக்கள், அதன் இழிவை ஆராய்ந்த விடத்தில், புலைத்தொழில் உடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.'

இங்கே கொலை என்பது மனிதக் கொலை, புலை என்பது உயிர்க்கொலை. உயிர்க்கொலையே மனிதக் கொலைக்கு வித்து என்ற கருத்து இங்கே தொனிக்கிறது.

பேராசிரியர் இக்கருத்தை எண்ணியுள்ளார் என்பது தெளிவு. கொலை, புலை என்ற சொற்களுக்கு அவர் வேறு விளக்கம் தரவில்லை - தெளிவுரை இங்கே காண்பவர் கண்ணின் தெளிவைக் கலைக்கவில்லை!

உயிரினமும் மனித இனமும்

மனித இனத்தின் தாய் மரபான இன அறிஞர் மரபு மனித னச் செல்வர்க்கென்று சிந்தனைச் செல்வம் வளர்க்கிறது. அதைத் தட்டிப் பறிக்கிறது, மனித இனத்தின் ஒரு பகுதி! மனித இன ஒப்புரவுணர்ச்சி, குடியாட்சிக் கோட்பாடு, கடவுள் கொள்கைகூட இதைத் தடுக்க முடியவில்லை.

இஃது ஏன்?

தாய்ப்பசு தன் கன்றுக்காகச் சுரக்கிறது பால்! தாய் வளம், இயற்கை தந்த வளம்; பிள்ளை உரிமை, இயற்கை தரும் உரிமை தான்! ஆனால், மனித இனம் டையே தலையிட்டு அதைத்

தட்டிப் பறிக்கிறது!

ம்

உயிரினம் தன் இன மரபு பேண ஆற்றல் பெருக்குகிறது. அந்த ஆற்றலையே நாம் தசை என்கிறோம். உயிரின் வளம் அது. உடலுக்குரியது, இன மரபுக்குரியது. ஆனால், உயிர்க்கும் உடலுக்கும் இடையே மனித இனம் புகுகிறது. குதிரையின் ஓட்டம் மனிதன் வண்டியிழுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கழுதையின் பொறுமை மனித இனத்தின் மூட்டை சுமக்கப் பயன்படுகிறது!