பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் – 18

உயிரினம் இனம் வளர்க்க உடல் பேணுகிறது. முட்டை யிடுகிறது. உயிரினத்தின் இவ்வளம் உயிரின மரபுக்கு உதவாமல், மனித இனம் தலையிடுகிறது. உயிரினங்களின் உடலைக் கொன்று உண்கிறது. அவற்றின் உயிர் மரபின் விதைகளான முட்டைகளைத் தன் தசைவளர்க்கப் பயன்படுத்துகிறது!

மனித இனத்தின் சிறுபான்மை-ஆக்கும் சிறுபான்மை யல்ல, அழிக்கும் சிறுபான்மை - மனித இனத்தின் பெரும் பான்மையைச் சுரண்டுகிறது. பெரும்பான்மை இதைக் கண்டிப்ப தில்லை; அறிவதில்லை; உணர்வதில்லை.

கண்டிப்பவர் உண்டு. இன அறிஞர் மரபில் வருபவர்கள் அவர்கள். ஆனால், பெரும்பான்மை இக்கண்டனத்தைக் காதில் போட்டுக்கொள்வதில்லை. தன் வாழ்க்கை பற்றிச் சிந்தனைசெய்யும் இனம்சார்ந்த எவரேனும் கூற முன் வந்தாலன்றி, அப்பெரும் பான்மை அதற்கு ஆதரவு தருவதுமில்லை!

இஃது ஏன்?

உயிரினத்தில் மனித இனமும் சிறுபான்மைதான். ஆக்கும் சிறுபான்மை யன்று. அழிக்கும் சிறுபான்மை. உயிரினங்களின் உரிமைகள் பறிபோவதை உயிரினங்கள் அறிவதில்லை.

ஆட்டைத் தின்ற மனிதனிடம் நாய் ஒரு துண்டு எலும்பைப் பெற்று மகிழ்கிறது. அதே சமயம் ஓநாய் ஆட்டை அணுகும் போது மட்டும் உறுமுகிறது.

கோட்பாடல்ல, பண்பு

திருவள்ளுவர் இதையெல்லாம் எண்ணினார்.

ஆனால், கொல்லாமை மீறியவரை எதிர்க்கவில்லை; கண்டிக்கவில்லை.

அவர் சமயப் புரட்சி செய்யவில்லை; கருத்துப் புரட்சி செய்தார்.

குறிக்கோள் உயர்த்தினார்.

‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்’

என்றார்.