பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

57

உயிர் ஒப்புரவுப் பண்பு வளர்ந்தது. அவர் வழி நின்றனர். எல்லாரும் - ஆனால், ஒரு சிலர் கொல்லா நோன்பு ஏற்றனர்.

இதற்கு வரலாற்றுச் சான்று உண்டு.

வட இந்தியாவில் கொலை வேள்வியை நிறுத்தியவன் அசோகன்.

இன்றுவரை அது மீண்டும் இந்தியப் பெருமக்கள் வாழ்வில் தலை காட்டவேயில்லை.

அவனுக்கு முன், ஆனால் புத்தர் பெருமான், மகாவீரர் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இந்தியாவில் வந்து தங்கி, தான் கண்டதும் கேட்டதும் எழுதிச் சென்றவன் மெகஸ்தனிஸ்.

அவன் கொல்லா நோன்பிகளைப் பற்றிக் குறிக்கிறான். ஆனால், தான் தங்கி வாழ்ந்த மகத நாட்டிலேயே இருந்த புத்த, சமணரின் கொல்லா நோன்பைப் பற்றி அவன் குறிக்கவில்லை.

தமிழகத்திலேயே கொல்லா நோன்பிகள் இருந்ததாக அவன் குறிப்பிடுகிறான். அவர்கள் தமிழரோ, வேறு குடியினரோ என்று ஐயப்பட இடமில்லை. அவர்கள் கறுப்பு நிறத்தவர் என்றும் அவன் குறிக்கிறான்.

புத்தர் சமணர் ஊனுண்ணாமையை வேறு வேறு வகையில் வலியுறுத்தினர். அது சமயக்கோட்பாடாயிற்று. ஆனால், வள்ளுவர் பெருமான் 'கொல்லாமை'யை ஒழுக்க நெறியாகப் பரப்பினார். அவர் அன்பறத்தில் அது ஒரு பகுதி.

இவ்விரண்டின் வேறுபாடு சிந்தித்துக் காணத்தக்கது.

வள்ளுவர் அருள் நெறிவாழ்க்கை கடந்த ஒரு கோட் பாடன்று. புத்த சமண நெறிகள் போல வாழ்க்கைக்குரிய ஒரு இரும்பு விலங்குமன்று. அஃது அவர் அன்பறத்தின் ஒரு கூறு, ஓர் உயிர்க்கூறு.

‘அறவினை யாதெனில் கொல்லாமை. கோறல் பிறவினை எல்லாம் தரும்’

என்று வகுத்துரைக்கிறார்.