பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

59

மன்னன் குடிகளைப் புரக்கிறான்; பாதுகாக்கிறான்.புரத்தல் தொழிலாலேயே அவன் புரவலன், புரந்தரன் ஆகிறான். அதற்குரிய தலைநகர் புரி; அதன் அரண் புரிசெய் அல்லது புரிசை ஆகிறது. அப்புரத்தலின் மறைதிறவு பாதுகாத்தலிலேயே, பொதுச் செல்வம் எல்லார்க்கும் ஒப்பப் பகிர்ந்தளித்தலிலேயே உள்ளது.

மன்னவன் ஒப்புரவு நெறி உயிர்களின் வாழ்வில் மட்டும் செயலாற்றுவதன்று. இயற்கைமீதும் ஒப்புரவு நெறி ஏற்றுவது. இயற்கையின் ஓர் இடத்தில் ஆறு இருக்கலாம், பிறிதோரிடம் ஆறு இல்லாதிருக்கலாம். ஓரிடத்தில் மழை பெய்யலாம்; மற்றோரிடத்தில் மழை ல்லாதிருக்கலாம். இயற்கையின் இவ்வுயர்வு தாழ்வைக்கூட மன்னவன் ஒப்புரவு செய்தல் வேண்டும். மிகுதியால் விளையும் தீமை குறைபாட்டால் விளையும் தீமையைச் சரி செய்யும்படி மாற்றுதல் வேண்டும்.

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு’”

'நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில், பருவ மழையும் நிறைந்த விளைவுகளும் ஒருசேர ஏற்படுவனவாகும்!