பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. வாழ்க்கைக் கோட்பாடுகள்

மனிதன் தனியாக வாழ்வதும் இல்லை. அவன் சிந்தனை, உணர்வு தனியான சிந்தனையாகவோ, தனியான உணர்வாகவோ இருப்பதுமில்லை. நட்பு, பகைமை, ஏதின்மை (புதுத்தொடர்புத் தன்மை) ஆகியவற்றின் வேறுபாடுகளில் நாம் இதனைக்

காணலாம்.

நட்பு என்பது, ஒரே வாழ்க்கை உணர்வுப் பழக்கமும் அதனுடன் ஒரே வாழ்க்கை நலமும் இணைந்தவர் சூழல்.

பகைமை என்பது, அதுபோலவே ஒரே வாழ்க்கை உணர்வும் பழக்கமும் உ உடைய சூழலே. ஆனால், இங்கே வாழ்க்கை நலம் மட்டும் எதிர் எதிர் முரண்பாடு உடையதாகிறது. நட்பு எளிதில் சிறு வேறுபாட்டால் பகைமையாவதையும், பகைமை எளிதில் நட்பாக மாறுவதையும் காண்கிறோம்.

ஏதின்மை என்பது, பகைமை, நட்பு ஆகிய இரு தொடர்புகளும் ஏற்படாத நிலை. ஆகவே, அதில் வாழ்க்கை உணர்வும் பழக்கமும், வாழ்க்கை நலமும் ஒப்புடையதல்ல. நெருங்கிய தொடர்பால் ஒப்பு இருப்பதாகக் காணப்பட்டாலும் அல்லது ஏற்பட்டாலும், அது நட்பாகலாம். வாழ்க்கை உணர்வும் பழக்கமும் மட்டும் ஒன்றுபட்டு நலம் வேறுபட்டால் அது பகைமையாகலாம். இரண்டு தொடர்பும் ஏற்படுமுன் உள்ள தொடர்பு, நட்புப் பகைமையினும் தொலைவான தொடர்பே ஏதின்மை. வெறுப்பு, உவர்ப்பு, அருவருப்பு, புறக்கணிப்பு ஆகிய உணர்வுகள் இதன் பாற்பட்டவை.

நட்பு, பகைமை, ஏதின்மை

நண்பர் ஒரே இனத்தவராயிருக்கலாம். இனத் தொடர் புடையவராயு மிருக்கலாம். ஒத்த பண்புடைய இருவேறு