பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

61

இனத்தவராகவும் இருக்கலாம். இரு வேறு பண்புடைய இரு வேறு இனத்தவர் தம்மளவில் ஒத்த பண்பினால் நண்பராகவும் கூடும். நட்பின் இத்தன்மைகள் அத்தனையும் பகைமைக்கும் உண்டு. ஏனெனில், பகைமை நட்புக்கு எதிர்ச்சொல்லன்றி, எதிர்மறைப் பண்பன்று. நட்பை நோக்கிச் செல்லும் ஒரு படியென்றே அதைக் கொள்ளலாம். ஆகவே, நட்பைப் போலவே பகைமையும் ஓரினத்தார்க்குள்ளோ, தொடர்புடைய இனங்களுக் குள்ளோ, வேறு வேறு இனங்களில் பண்பு ஒத்தவழியேதான் ஏற்பட முடியும்.பண்புத் தொடர்பற்றவரிடையே நட்பும் இராது, பகைமையும் இராது. நட்பு, பகைமை இரண்டுமே பண்புத் தொடர்புக்கு அறிகுறிகள். சரிசம நிலைக்கு அறிகுறிகள்.

நட்பு, பகைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பண்பு ஏதின்மையே. அஃது இருவகைப்படும். நட்பாக, பகைமையாக மாறுவதற்குரிய ஏதின்மை சரிசம நிலையுடைய ஏதின்மை ஆகும். மற்றொரு வகை ஏதின்மை உண்டு. அஃது என்றும் இயல்பாக நட்பு, அல்லது பகைமையாய் மாற முடியாத ஏதின்மையாகும். இதுவே உயர்வு தாழ்வுடைய ஏதின்மை. இங்கே பகைமை என்றும் ஏற்பட முடியாது. அதற்கு மாறாகச் சில சமயம் ஆண்டான் அடிமைத் தொடர்பு ஏற்படும். நட்பு ஒன்றும் ஏற்பட முடியாது. சில சமயம் அதனிடமாக அருளன்பு இடம்பெறக் கூடும். ஆனால், இரு பண்புகளுமே ஒரு சிறிதும் ஏற்படாத ஏதின்மையே பெரும்பான்மையாகும்.

ஏதின்மை, பகைமை, நட்பு, இனத் தொடர்பு இவை படிப்படியான பண்பு வளர்ச்சியைக் காட்டும்.

ஏதின்மை, உயிரிலாப் பண்பு. பகைமையும் நட்பும் உயிர்ப் பண்புகள், அவையில்லாதவிடத்து உயிர்ப் பண்பு தோற்றாது. வாழ்க்கைப் பண்பு செயற்படாது.வாழ்வின் அடிப்படைக்கே வழி இராது. இதற்கு நேர் எதிரான இனத்தொடர்பு உயிர்கடந்த உயிராக்கப் பண்பு, வாழ்வுப் பண்பு.

நீடித்த பகைமை, நீடித்த நட்பு ஆகிய இரண்டு படிகளிலும் உயிர்கள் ஒன்றை ஒன்று அல்லது ஒருவரை ஒருவர் அறிந்து உணர்ந்த ஒப்புணர்வின் அடிப்படையிலேயே இனமும் தோன்றுகிறது; வாழ்வும் தொடங்குகிறது.