பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் – 18

பல உயிர்கள் ஒன்றாய் ஒரு குழுவாகி, ஓருயிர்போலப் பல உயிர்கள் கூடி இயங்குவதே வாழ்வு என்று கூறப்படும். அங்ஙனம் ஒன்றுபட்டு ஓருயிர்போல வாழும் குழுவே இனம் ஆகும். அத்தகைய இன வாழ்விலேயே பெருக்கம், வளம், பொங்கல் ஆகியவற்றுக்கு வழி உண்டு.

என்று

இதுவே வாழ்வினம், இனம் வாழ்வியல், சமுதாயவியல் அரசியல் நூலாரால் குறிக்கப்படுவது. இஃது இனம் என்ற சொல்லின் சிறப்பு வழக்கு. ஆனால், இயல்நூல் துறையின் ஒரே பொதுப்பண்புடைய உயிர்களையும் பொருள் களையும் இனம் என்று கூறுவதுண்டு. இஃது இனம் என்ற சொல்லின் பொதுவழக்கு ஆகும்.

வாழ்தல் என்ற சொல்லுக்குக் கூடி இயங்குதல், சமுதாய, ன உறுப்பினராக நிலவுதல், வளம் பெறல், நின்று நிலைபெறல் ஆகிய பொருள்கள் ஏற்பட்ட வகை இதுவே. அது வாழ்வினத்தில் மட்டுமே தனி உயிர் பெறும் வளர்ச்சி ஆகும்.

னச்சுட்டு

இனம் என்ற சொல்லை நாம் பொதுச் சொல்லாகவும், பொதுப் பண்பு குறித்த சொல்லாகவும் வழங்குகிறோம். சிறப்புச் சொல்லாக, இனத்தின் உட்பிரிவுகளைக் குறித்த சொல்லாகவும் வழங்குகிறோம். உயிரினம் என்று எல்லா உயிரினங்களையும் தொகுத்துணர்த்தவும் வழங்குகிறோம். ஓர் உயிரினம் குறிக்கவும் வழங்குகிறோம். மனித இனம் என்று பொதுவாகவும் மனித இனத்தினுள்ளேயே ஓர் இனம் என்றும் கூறுகிறோம்.

இதுபோலவே இனம் குறித்த எல்லாச் சொற்களுமே பொது, சிறப்பு என இரு சுட்டுகள் உடையன. குதிரை என்பது குதிரை இனத்தையும் குறிக்கலாம். அவ்வினம் சார்ந்த ஓர் உயிர், ரு குதிரையையும் குறிக்கலாம். இவற்றை வேறுபடுத்த வட ஐரோப்பிய மொழிகளில் மட்டும் பொதுச் சுட்டுச்சொல் என்றும் (ஆங்கிலம் : a, an) சிறப்புச்சுட்டுச் சொல் என்றும் (ஆங்கிலம் : The; பிரஞ்சு; ஜெருமன் Leder) வேறுபாடுகள் உண்டு. தென் ஐரோப்பிய மொழிகள், கீழை உலக மொழிகள் ஆகியவற்றில் அவை ஆரிய இனமொழிகளாயினும் சரி, பிற இனமொழிகளாயினும் சரி, இவ்வேறுபாடு கிடையாது. ஆனால்,