பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

63

இவற்றினும் ஆழ்பண்புடைய முச்சுட்டு முறை ஒன்று எல்லா உலக மொழிகளிலும் இருந்ததென்று கருத இடமுண்டு. இவற்றின் தடம் வடஐரோப்பிய மொழிகளில்கூட இல்லாம லில்லை. தமிழ் மொழி ஒன்றுதான் அந்த மூன்றுசுட்டு மரபை இலக்கியக் காலத் தொடக்கம் வரை காத்து வந்துள்ளது.

தமிழிலுள்ள முச்சுட்டு ஏதின்மை, தொலை, அணிமை குறித்தது. ஏதின்மைச் சுட்டாகிய 'உ' மேல் கீழ், பின்புறம், மிகுதொலை, தொடர்பின்மை, ஏதோ ஒன்று என்ற அறியாப் பொதுமை ஆகியவற்றைச் சுட்டுவது. மேல் என்ற பொருளில் அதனை வட ஐரோப்பா உட்படக் கிட்டத்தட்ட எல்லா உலக மொழிகளிலும் இன்று காணலாம். தொலை அணிமைச் சுட்டுகளாகிய ‘அ', 'இ' என்பவற்றைத் தமிழின மொழிகளிலும் தென் ஆரிய மொழிகளில் (இலத்தீனம்:ஆங்கே,இங்கே; சமற்கிருதம் தத்-அது ஏதத், இதம்-இது) சிறப்பாகவும் பிறமொழிகளில் பொதுவாகவும் காண்கிறோம்.

ஏதின்மை, பகைமை, நட்பு என்ற மூன்று படிகளிலும் அதற்கிடையில், அறியாப் புதுமை, அறிவு, பழகிய அறிவு அல்லது ஒத்துணர்வு ஆகியவற்றிலும் மனித இனம் படிப்படியாக இன உணர்வு நோக்கி வளர்ந்த வளர்ச்சிகளை இச்சொற்கள் இன்றும் காட்டுகின்றன.

தனி வாழ்வுப்படி

6

தனிமையை முழுவதும் விரும்பும் மனிதனையோ, உயிரினத்தையோ நாம் இன்று காண்பது, எண்ணிப் பார்ப்பது அரிது. தனிமையை, விரும்புவதாகக் கூறுபவர் உண்மையில் தம் உலகம் முழுவதையும் தம்முடன் கொண்டு செல்லும் உள்ளாற்றல் உடையவர்களே. அத்தனிமையும் வாழ் உலகத்தில் தொடர்பற்ற தனிமையன்று. அது நீடித்த, பல ஊழி தொடர்ந்த, கூட்டு வாழ்வின் விளைவேயாகும்.

ஆயினும், தொடக்க உயிர்கள் வாழ்வு பெரிதும் தனி வாழ்வாக, உயிரிலாப் பொருள்கள் நிலையிலிருந்து மிகுதி வேறுபடாததாகவே இருந்துவந்தது - அணு உயிர்கள் நிலை இன்னும் அதில் மிகுதி வேறுபட்டதல்ல. ஏனெனில், உயிர்கள் குடும்பம், சமுதாயம், இனம் ஆகிய கூட்டுறவுக் குழுக்களாக