பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

65

இன்றைய மனிதர் கண்ணோட்டத்துக்கும் கருத்தோட்டத் துக்கும் இந்நிலை மிகக்கொடுமையாகத் தோற்றக் கூடும். ஆனால், இச்செயல்களில் இன்றிருக்கும் கொடுமை உணர்ச்சி அருவருப்புணர்ச்சி, பகைமை உணர்ச்சி, உயிருலகில் அன்று தோற்றவில்லை. கொடுமையில்லாத அந்தக் கொலை உணவுப் பண்பு, அருவருப்பில்லாத அந்தத் தசைச் சுவைத்திறம், பகைமை யில்லாத அந்தப் போராட்ட ஆர்வம் இன்னும் இனவாழ் வினூடாக நம் மனித உயிர்வரை வந்து நம்மையறியாமல் ஆக்கி வளர்க்கும் நல்லுணர்வாகவே மாறி இயங்கி ஊடாடுகின்றன.

இளம் பிஞ்சின் சுவையை நாம் இன்னும் விரும்புகிறோம். கனிந்த பழங்களில் நாம் இன்னும் இனிமை காண்கிறோம். இந்தச் சுவையுணர்வு எப்படித் தொடங்கிற்று என்பதை உயிர் நூலார் காட்டினாலன்றி நாம் உணரமாட்டோம். இளங்குழந்தைகளைக் கண்டவுடன் மகிழ்கிறோம். எடுத்தணைத்து முத்திக்கொள்கிறோம். பகைமை தோற்றாத காலத்தின் அழிவுச் செயல்களின் உணர்ச்சியே ஆக்க உணர்ச்சியாக மாறி வாழ்வின் வளங்காண உதவும் அழகுணர்ச்சிகளாக, இன்று இயங்குகின்றன.

தன்னலமும் தற்காதலும்

ன்ப அவாவுணர்ச்சிகளாக,

இன்று காதல் துணைவரை, குடும்பத் துணைவரை வாழ்த்தும்போது ‘ஈருடலும் ஓருயிரும் போல வாழ்வீராக', என்று அழகாக வருணிக்கிறோம். இன்று இது வருணனை; அழகு வருணனை. ஆனால், இதில் அறிவியல் உண்மையும் உண்டு. உயிரின வரலாற்று வாய்மையும் உண்டு.

பருவமடைதல் என்ற கருத்துக்கு உயிர்நூலார் கூறும் பொருள் சுவையுடையது. ஆடவர், பெண்டிர் இருவர் உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் தாய்க்கூறு, தந்தைக் கூறு இரண்டும் உண்டு. பருவமடைதல் என்றால், இதில் ஒரு கூறு நீங்குதல் என்பதுவே பொருள். பருவமடையுமுன் முழு உயிர்ப் பிஞ்சாக இருந்த ஆடவர் பெண்டிர், பருவமடைந்த பின் முழுதும் வளர்ந்த அரையுயிராய் விடுகின்றனர்.மண வாழ்வுக் கூட்டுறவில் இருபாதிகளும் மீட்டும் இணைந்தே புத்துயிர் பிறக்கிறதாம்!