பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் – 18

இஃது ‘ஈருடல் ஓர் உயிர்' பற்றிய உயிர்நூலின் அறிவியல்

உண்மை.

உயிர் நூலின் உயிர் வரலாற்றுண்மை இன்னும் புதுமை வாய்ந்தது. நம் அழகு வருணனையை அது நமக்குப் பிடிக்காத அளவில் முழு உண்மையாக்கி விடுகிறது.

உயிரின வரலாற்றில் தொடக்கத்தில் ஆண், பெண் வேறுபாடே கிடையாது. இனப் பெருக்க வாழ்வு வேறு, உணவு வாழ்வு வேறு என்ற நிலை கூட ஏற்படவில்லை. தின்று பெருத்த உயிர் இரண்டாக வெடித்தது. இரண்டு உயிராயிற்று. அவை தின்று பெருத்து நான்காயின, இப்படிப் பெருக்கம் இரட்டை எண்ணாக, இரட்டித்த பெருக்கமாகவே வளர்ந்தது. இன்றும் நுண்ணணு உயிர்கள் (Bacteria) இப்படியே பெருகுகின்றனவாம்!

இன்று இருவர் சேர்ந்தது குடும்பம். அது மூன்றாக, நான்காக, எந்த எண்ணாகவும் பெருகலாம். ஆனால், அந்த உயிர்த்தொடக்கக் கால வளர்ச்சியில் எல்லா எண்ணையும் பார்க்கமுடியாது. இரண்டு, நாலு, எட்டு, பதினாறு - இது தான் வளர்ச்சிப்போக்கு. மூன்று, ஐந்து, ஏழு முதலிய ஒற்றை எண்களையோ,ஆறு,பத்துப் போன்ற ஒற்றை எண்ணின்

பெருக்கத்தையோ காணமுடியாது!

கீழ்வாய் இலக்கத்தில் இன்னும் இரண்டில் ஒன்று, நாலில் ஒன்று போன்றவைதாம் உண்டு. மூன்றில் ஒன்று, ஐந்தில் ஒன்று, ஏழில் ஒன்று அரிது, (தமிழில் ஐந்தில் ஒன்று இருப்பது புதுமை; மூன்றில் ஒன்று, ஏழில் ஒன்றுகூட ஏற்பட்டிருக்கின்றன!) ஆறில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, பதினொன்றில் ஒன்று, இவற்றின் பெருக்கம் முதலியவைகூடக் கிடையாது.

ஆண், பெண் வேறுபாடு ஏற்பட்ட பின்னும் ஓர் உயிரே ஆணாகவும் பெண்ணாகவும் அமைந்தது - அம்மையப்பனான பழைய அரன் வடிவம் இதை நினைவூட்டுவதே என்று கருதலாம்! நிலப்புழு போன்றவை இம்மரபை இன்னும் நீடிக்கின்றன. இத் தொல் பழங்காலத் தற்காதலிலிருந்தே மனிதனிடம் இன்றும் தன்னலம் நீடிக்கிறது என்னலாம்!

தன்னலம் உடைய மனிதர் இன்னும் தம் வாழ்வில் ஓரளவு முன்னேறக் கூடும். ஆனால், தற்காதல் செய்த உயிர்கள் உயிரினப்