பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

67

போட்டியில் எவ்வளவு பிற்பட்டுவிட்டன என்பதை அவற்றின் தேய்ந்து நலிந்துவிட்ட மரபே காட்டும். அவற்றின் மரபுத் தடமாக இன்று ஒன்றிரண்டு உயிரினங்களே உள்ளன. தன்னல வாழ்வும் இதுபோல இன மரபில் பிற்பட்டு நலிவதேயாகும். அத்துடன் இன்றைய அறிவுடைய தன்னலம் பெறும் சிறிதளவு வெற்றிக்குக்கூட அது பெரிதும் பொதுநலப் போர்வை போட்டுக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

தன்னல முடையவர் இன்று அடையும் வெற்றி அவர்கள் பொதுநலப் போர்வையின் அளவிலேயே அமையும். அஃது அவர்கள் தனி வாழ்வில் வெற்றி தந்தபின், அவர்கள் உள்ளார்ந்த தன்னலம் அவர்கள் இன மரபில் நலிவூட்டும். நேர்மாறாகப் பொதுநல முடையவர் இனச்சூழலின் தன்னலத்தினால், தற்காலிகத் தோல்வி பெறலாம். ஆனால், அவர்கள் பொதுநல உணர்வு இன மரபை வளர்க்கிறது.

சிற்சில சமயம் நல்லார் நலிவதையும், பொல்லார் வளர்வதையும் கண்டு பலர் புழுக்கம், மனக்கசப்படைவதுண்டு. தொலைநோக்குடையவர்களே அவற்றின் தொலைவிளைவுகள்

காணமுடியும்.

திருவள்ளுவர் 'அவ்வுலகம்', 'மறுமை',மறுபிறப்பு'; எழுபிறப்பு' என்றது இவ்இனமரபையே. தமிழ்ப் பண்பும் திருவள்ளுவர் கருத்து மரபும் மறக்கப்பட்ட பின்னாளில், இதுவே உலகெங்கும் புத்தர், சமணர், ஆரியர் ஆகியோரின் மறுபிறப்புக் கோட்பாடாகவும், உலகின் ஏழு உலகக் கோட்பாடாகவும் மயங்கி உணரப்பட்டன.

ஆதிக்க வாதம்

ணவுப் போராட்டக் காலத்தில் தொடக்கத்தில் பசி, பசி தீர்ந்த மனநிறைவு, அச்சம் ஆகிய மூன்று உணர்ச்சிகள் தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு வழி ஏற்படவில்லை. கொடுமை, பகைமை முதலிய உணர்ச்சிகள் அவற்றைக் காணும்போது, அல்லது எண்ணும்போது உணர்ச்சியில் வளர்ந்துவிட்ட நம் உள்ள நிலையைக் காட்டுவதேயாகும். அவ்வுணர்ச்சிகள் தொடக்க உயிர்களிடமோ, தொடக்கக் கால மனிதனிடமோ கிடையாது.

6