பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் – 18

பேருயிர்கள் உண்டு பசியாறின; சிற்றுயிர்கள் அவற்றுக்கு

அஞ்சின.

பேருயிர்கள் பேருயிர்களை, சிற்றுயிர்கள் சிற்றுயிர்களைத் தின்னத் தொடங்கிய காலத்திலேயே உணவுப் போராட்டம் உயிர்ப் போராட்டம் ஆயிற்று. இந்தச்சரிசம நிலைக்கேற்ப, அச் சரிசம நிலையின் சிறு உயர்வு தாழ்வுகளுக் கேற்ப, வீம்பு, வீறு, வீரம், பகைமை, தன்மானம், வெற்றிக்களிப்பு, எக்களிப்பு முதலிய உணர்ச்சிகள் வளர்ந்தன. இவற்றின் பண்பை இன்றுவரை தனிமனிதர் வாழ்விலே காணலாம். இவை அன்புடைய உணர்ச்சி களல்ல. ஆனால், அன்புடைமைக்குரிய சரிசமத்துவத்தை அணுகிய உணர்ச்சிகள் இ வை என்பது தெளிவு.

வீம்பின் மிகுதியே ஆதிக்கத்தின் அடிப்படை. அது தன்னலம், தன்னலத்தின் குறுவிரியாகிய குழுநலம் ஆகியவற்றுடன் சேர்ந்து இன்னும் பல தனிமனிதர்கள் வாழ்விலும், பல இனங்களின் வாழ்விலும் நாட்டு வாழ்விலும் ஆதிக்கவாதமாக, அடக்குமுறையாகக் காட்சி தருகின்றது.

ஆதிக்க வாதம் தழைக்குமிடத்தில் அதற்கெதிரான அடிமைத்தனமும் தழைக்கும். நட்பு, பகைமை ஆகியவை ஒரே பண்பின் இரண்டு எதிரெதிர் கோடுகளாய் அமைவதுபோல, ஆதிக்க மனப்பான்மையும் அடிமை மனப்பான்மையும் வெளிப்பார்வைக்கு எதிரெதிர் பண்புகளே தவிர உண்மையில் ஒரே பண்பின் இருபுறங்களே. ஆதிக்கவாதம் வீழ்ச்சியடைந்தால் அஃது எளிதில் அடிமை மனப்பான்மையாகவும், அடிமை மனப்பான்மை ஆட்சிக்கு வந்தால் அஃது எளிதில் ஆதிக்க வாதமாகவும் மாறிவிடும். இந்த இரண்டு பண்புகளுமே இன மரபழிக்கும் பண்புகள். கொடு விலங்குகளின் வாழ்வு இதைக் காட்டுகிறது.

தனிக் காட்டரசன் என்று பெயர் பெற்றது சிங்கம். ஆதிக்கத்திலும் வீரத்திலும் இன்றுவரை அதுவே அரசர் மரபுக்கும் கவிதை மரபுக்கும் உரிய சின்னம். அஃது உலகின் பல காடுகளிலும் திரிந்த விலங்கு, போட்டியற்று ஆட்சி செய்த விலங்கரசு! ஆனால், இன்று அதன் மரபெங்கே? ஆப்பிரிக்கப் பாலை வனம் ஒன்றிலிருந்துதான் உலகெங்கணும் உள்ள விலங்குக்