பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

69

காட்சி சாலைகளுக்குச் சிங்கங்கள் தேடிக் கொண்டு வரப்படுகின்றன. அசாமில் சிங்கங்கள் ஒரு சிலவாகிவிட்டனவாம்! இந்திய அரசியல் சட்டம் அதன் மரபுப் பாதுகாப்புக்காகச் சட்டவிதிகள் வகுத்துள்ளன. அதனைக் கொன்றழிக்கும் னமான மனித இனத்தின் தொலை அறிவுடைய சட்ட அமைப்பே அதன் மாள்வைத் தடுக்க வேண்டியிருக்கிறது. அதன் மரபு ஆற்றல் அதைக் காக்கவில்லை.

மற்றக் கொடு விலங்குகளும் மரபு நலிந்தே வருகின்றன.

சிங்கத்தின் நிலைதான் சிங்காதனமிட்டு ஆண்ட அரசர் நிலைக்கும் உலகில் ஏற்பட்டு வருகிறது. அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன், விக்கிர மாதித்தன், சேரன் செங்குட்டுவன்,

ராசேந்திரன் ஆகிய வல்லரசர், பேரரசர் வளர்த்த வீர நினைவு நீடிக்கிறது. ஆனால், அவர்கள் வாழ்ந்த இனங்களிலேயே பல அழிவெய்தியுள்ளன. இனத்துக்கு அவர்கள் வீறளித்தார்கள்; வாழ்வளிக்கவில்லை; மரபு வளர்க்கவில்லை!

சிங்க மரபைக் காக்க எண்ணும் கலையுணர்ச்சிதான் இன்று சிங்காதன மரபுகளின் மரபுகளின் சின்னங்களையும் காப்பளித்துப்

பேணவேண்டியிருக்கிறது.

ஆதிக்க வாதமும் அடிமை மனப்பான்மையும்

ஆதிக்க வாதத்தின் மிகப் பெருங்கேடுஅஃது அடிமை மனப்பான்மையை வளர்ப்பதே. அடிமைகளிடையே உயிரினங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட பல நற்பண்புகள்கூடத் தீய பண்புகள் ஆய்விடுகின்றன. ஆதிக்க வாதத்தின் வீம்பை அது பசப்பாக்குகிறது. அதன் நேரடித் தாக்குதல்களை மறைமுகத் தாக்குதல்களாக்குகிறது. அத்துடன் பொய்ம்மை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று, கொடுமை, கயமை ஆகிய அருவருக்கத்தக்க பண்புகள் அடிமைகளிடையேதான் வளரமுடியும். ஆதிக்க வாதிகள் தோல்வியால் அடிமைகளாகவும், அடிமைகள் வெற்றியால் ஆதிக்கவாதிகளாகவும் மாறுவதால், அடிமை யாதிக்கமே ஆதிக்கத்தில் மிகக் கொடிய ஆதிக்கம் ஆகிறது. அடிமைகளுள் சிலர் அறிவும் பெற்றுவிட்டால், அஃது உலகை, மனித இனத்தையே உள்ளூரத் தின்றழிக்கும் எலும்புருக்கி