பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் – 18

நோயாய்விடுகிறது! தற்சிந்தனை வகுப்பு உண்மையில் அடிமைக் காலத்தில் புதிதாக எழுந்த ஒரு போலி வகுப்பேயாகும்.

கிரேக்க உரோமப் பேரரசுகள் பல உயர் பண்புகளை உலகுக்குத் தந்தவை. ஆனால், அவற்றின் அழிவுக்கு ஆண்டான் அடிமை முறையே காரணமாயிருந்தது. அடிமையாதிக்கம் பெற்ற காலப்பண்புக்கு உரோமப் பேரரசன் நீரோ ஓர் அழியாச் சான்றாகின்றான். ஆங்கிலப் பழமொழி ஒன்று அந்நினைவை நீட்டிக்கிறது.உரோம் நகரம் எரிவதை நீரோ கண்டு களித்தானாம். அதுதான் அவன் கலைப்பண்பு. இன்றும் கலையின் பெயரால் உலகில் நீரோ மரபு நீடிக்காமலில்லை. கலை கலைக்காகவே என்ற கூக்குரலிலும், இசைக்கலை மொழி கடந்த கலை என்ற நச்சுவாதத்திலும் நீரோ மரபு நிழலாடுகின்றது.

உடலில் வலு ல்லாத நரி, ஆதிக்கவாதத்தை எதிர்க்க வழங்கிய அடிமைப் பண்பே, ன்னும் உலக மொழிகள் எல்லாவற்றிலும் சூழ்ச்சி குறித்த உருவகமாயுள்ளது. குள்ளநரிச் சூழ்ச்சி பல இடங்களில் வெற்றியடைவதுண்டு. ஆனால், உயிரினமும் சரி, மனித இனமும் சரி, அதை ஒன்றுபட்டு அடக்கி அழித்தே வந்துள்ளன, வரும், வருதல் வேண்டும். அத்தகைய அழிவறிவைவிட மடமையே ஆயிரமடங்கு மேம்பட்ட பண்பு ஆகும். பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகத்தில் வரும் குடிலன்,இப்பண்போவியத்துக்கு முன்மாதிரி என்று கூறக்கூடிய ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் வரும் அயாகோ ஆகியோர் குள்ளநரிச் சூழ்ச்சிகளின் திறத்துக்கு அழியாச் சான்றுகள். மனித இனம் முழுவதும் வெறுக்கும் ஒரு பண்பு உண்டென்றால், அஃது இதுதான். மனித இனத்தை அழிக்கத்தக்க, மனித இனம் ஒன்றுபட்டு அழிக்கவேண்டிய ஒரு தனிப்பெருந் தீங்கு இதுவே!

ன்

புரோகித வகுப்பினரிடம் இப்பண்பு, சிலசமயம் அரசியல் ஆதிக்கம், அறிஞர் ஆதரவு, சமயத் தலைமை ஆகியவற்றுடன் இணைந்து மிக நீடித்த வாழ்வு வாழ்வதுண்டு. இன்றும் தமிழகத்தில் மூலதளம் அமைத்து, இந்தியாவெங்கும் ஆட்சி செய்யும் நிலையில் அறிஞர் வகுப்பின் ஒரு பெருங் கூறாகவும், ஆட்சி வகுப்பின் உட்கூறாகவும், தமிழ்ப்பண்பை முழுத் திரையிட்டு உலகில் தன் நச்சுயிர்ப் பண்பைப் பரப்பிவருங்