பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

71

கூறாகவும் இத்தகைய ஓர் அடிமையறிஞர் வகுப்பு மக்கள் சமயத்துறையைத் தன் மடமைப் பயிர் வளர்க்கும் துறையாகப் பேணியே வருகின்றது! தமிழினம் நீங்கலாகப் பண்டைப் பேரினங்கள் பல இந்தப் புரோகித வகுப்பின் ஆட்சிக்கு இடம் தந்ததனாலேயே மாண்டு மடிந்துள்ளன. வள்ளுவர் மரபில் வந்த தமிழ்ப் பண்பு பேணிய அறிஞர், சித்தர் அவ்வழிவு மரபுடன் இன்றுவரை போராடி வந்துள்ளதனாலேயே, தமிழ் மொழியும், இனமும், பண்பும், பேரளவில் நலிந்தும் இன்னும் மரபறாது இயங்குகின்றன. இனியும் அம்மரபொழித்து இயங்கவல்ல ஆற்றல் அஃது ஒன்றுக்கே உலக இனங்களில் மீந்துள்ளது! தமிழ் வாழ வேண்டுமானால், உலகம் வாழ வேண்டுமானால், அம்மரபின் மெய்ந்நிலை, உணர்ந்து உலகம் அதைத் திருத்தியாதல் வேண்டும்!

மனித இனத்தில் குள்ளநரியின் பண்புக்கு உள்ளார்ந்த ஓர் இட டம் உண்டு. மனிதனும் மற்ற விலங்குகளை நோக்க, உடல் வலிமையும் உறுப்பாற்றலும் குறைந்தவனே. ஆயினும், உழைக்கும் கைகள், நிமிர்ந்த உரு, குடும்ப, சமுதாய, இன அறிவு, மரபு ஆகியவை அவன் அறிவைக் குள்ளநரி அறிவாக்காமல், குரங்கின் குறும்பாக்காமல், பறவைகளை ஒட்டிய காதலன்புப் பண்பிலும், யானையை ஒத்த சமுதாய, ன மூளைப் பண்பிலும் வளர்த்துள்ளன. அவன் மரபு குள்ளநரி மரபை உட்கொண்ட தாயினும், குள்ளநரி மரபாகாமல் காத்து வந்துள்ள கூறுகள் இவையே. காத்துவரும் இந்தக் கூறுகளைப் பேணிவரும் இனங்களில் தலைமையானது தமிழினம்!

உயிர்ப் போராட்டம்

உயிர் நூல் புலவர்கள் உயிரின வரலாற்றில் உணவுக்கான உயிர்ப் போராட்டத்துக்கே அதன் தகுதிக்கு மேற்பட்ட முழு முதன்மையளித்துள்ளார்கள். குடும்ப சமுதாய மரபுப் பண்புகளில் அவர்கள் இன்னும் போதிய கவனம் செலுத்த வில்லை! உலக வரலாறு இயற்றிய எச்.ஜி.வெல்ஸ் என்பார் 'பெரு விலங்கேதான் நீடித்து நின்று வாழக்கூடும்' என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ‘அறிவு கூடப் பேருருவுக்கு முன் பயன்படாது' என்றும் அவர் குறிக்கிறார்.