பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் – 18

பேருருவுடைய யானை மற்றெல்லா உயிரினங்களையும் விட நீடித்த வாழ்வுடையதாய் இருக்கிறது. ஆயினும், இந்த வலிமை அதைச் சிங்கத்துக் கெதிராக, புலிக்கெதிராகக் காப்பாற்றியிருக்க முடியாது. அதன் நீடித்த வாழ்வுக்கும், இன்னும் அஃது உலகில் வளத்துடன் வாழ்வதற்கும் காரணம் அதன் பேருருவமன்று. மேலும் அதன் வலுபாதுகாப்புக்கானதேயன்றி, அழிவுக்கான தன்று. காட்டானையிடம் இன்று காணக்கூடும் அழிவுச் செயல்கள் அதன் இன வளர்ச்சிக்குரிய ஒரு விளையாட்டே தவிர வேறல்ல. தவிர வேறு எவ்வுயிரினத் திலும் பெண்ணினத்துக்கன்றி ஆ ணினத்துக்கில்லாத ‘மதம் பொழிவு' அதன் ‘பொங்கல் ஆற்றலுக்கு'ச் சான்றாகும். குடும்ப, சமுதாய, இன வாழ்வில் மனிதனுக்குச் சில வகைகளில் மேம்பட்டுச் சில வகைகளில் அடுத்தபடியாக,யானை முன்னேறியதன் பயனே இஃது என்பதில் ஐயமில்லை.

உயிரினங்களின் உடல் எடை, மூளை எடை ஆகிய இரண்டின் விழுக்காட்டையும் உயிர் நூலார் கணித்துக் கண்டுள்ளனர். மனித இனத்தின் உச்ச நிலை விழுக்காட்டை அணுகியுள்ள விலங்கு யானை ஒன்றே என்று தெரிய வருகிறது.

மனிதன் பழக்கும் விலங்குகளுள் அடிமைப் பண்பை ஒரு சிறிதும் ஏற்காத விலங்கும் யானையேயாகும்.

நாயின் தன்னினம் பகைத்த அடிமைத் தனத்தையே மனிதர் 'நன்றி' என்றும், இன நினைவறாத யானையின் தன்மான உணர்ச்சியையே நன்றிக் கேடென்றும் கூறுவர். நாலடியின் ஒரு பாட்டு மனித இனத்தின் இத்தவறான கருத்தை வலியுறுத்துகிறது. 'யானை யனையார் தம்கேண்மை மிகவுரீஇ

நாயனையார் கேண்மை கொளல்வேண்டும் - யானை இருந்திருந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்!'

யானையினம் உலகின் முதற் பேருயிரினங்களுள் ஒன்று. அதன் துதிக்கை, இரு காலில் நிற்க முடியும். அதன் உடல் அமைப்பு, கொம்புபோல் நீண்ட பல், திண்தோல், சேற்று நீர் விருப்பம் முதலியனவற்றுள் மனித இனத்துடன் தொலை யுறவையும், எருமை, பன்றி, பெருச்சாளி ஆகியவற்றுடன்