பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் – 18

வையனைத்தும் பொதுவாக உயிரின மரபின் வாழ்வினாலும் மனித இன மரபின் வாழ்வினாலும் தாண்டிக் கடந்து விடப்பட் இடர்ப்பொறிகள் ஆகும். பல தனி மனிதரையும் மனித இனக் குழுக்களையும் அஃது இன்னும் பழைய மரபின் எச்சமாகிய இழிவுடைய நோக்கங்களாகப் பீடிக்கின்றன வாயினும், மனித இனம் அளவு கடந்து வாழ்வும் வளமும் பெருக்கும் என்று நம்பலாம்! தமிழும் தமிழினமும் தமிழ்த் திருவள்ளுவர் பண்பும் அவ்வகையில் மனித இனத்துக்கு உறுதி அளிக்கவல்லன.

காதல் வாழ்வு

இன்றைய உயிரின உலகில் கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களிலுமே ஆண் பெண்பால்களின் எண்ணிக்கை, வாழ்நாள், உருவமைதி, வடிவமைதி ஆகிய யாவும் கிட்டத்தட்ட சரிசம நிலையுடையனவாகவே இருக்கின்றன. உயிரின் தொடக்கக் காலத்தில் எல்லா உயிர்களும் இருபாலுயிர்களாகவே இயங்கிய நிலையில், இஃது இயல்பே என்னலாம். ஆயினும், பல இனங் களிலும், பல படிகளிலும் இவற்றுள் வேறுபாடு ருந்து வருகின்றன; வந்துள்ளன.

ஓர் ஆண், ஒரு பெண் என்ற இணைபுடைய உயிரினங்களே இன்று மிகப்பல. ஆயினும், இணைதுணையாக இசைவுறாத யிர்களும் ஓர் ஆண் பல பெண், ஒரு பெண் பல ஆண், ஆணின் பல தலைமுறைக்கு ஒரு பெண், ஆண், பெண் ஆகியவற்றுடன் அலியினம் என்ற முப்பாற் பிரிவு (தேனீ) முதலிய பலவகைப்பட்ட பாலின வேறுபாடுகள் உயிரினங்களிலும் உண்டு, செடி கொடிகளிலும் உண்டு.

இனப்பெருக்கம் முதலிய பாலினச் சார்பற்றதாகவும், பாலினச் சார்பான பின்னும், உயிரின் செயலின்றி இயற்கை யாகவுமே இருந்து வந்தது. செடி கொடிகளில் பூவா னங்களிலும் அணு உயிரினங்களிலும் பாலினச் சார்பற்ற பெருக்கம் காண்கிறோம். தவிர, செடியினங்களில் காற்றும் பனித்துளியும் நீரோட்டமுமே ஆண் பூந்துகளைப் பெண் மலரில் கொண்டு வீசப் பயன்படுகின்றன.

காதல் வாழ்வில் உயிரினம் உணவுயிர்ப் போராட்டத் திலில்லாத பல பண்புகளை இயல்பாகப் பெற்றன. இயற்கைப்