பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

75

பருவ உணர்வு தொடக்கத்தில் இரண்டு உயிர்களைச் சிறிது நேரத்துக்கேனும் போராட்டமின்றி இணையச் செய்தன. ஆனால், கீழின உயிர்கள் பலவற்றில் இந்த அமைதிகூட நீடித்ததாயில்லை. தேனீயினத்தில் காதற் கட்டத்தின் முடிவில், அலித் தேனீக்கள், ஆண் தேனீக்கள் அனைத்தையும் கொன்றுவிடுகின்றன. தேளினத்தில் பெண்தேள் காதல் கூட்டம் முடிவுற்றதும் ஆண் தேளைத் தின்னுகின்றது. அது மட்டுமன்று; குட்டியிட்டதும் ஒரு குட்டியைத் தின்று பசியாறுகிறது.மீன்கள், பாம்புகள் வாழ்விலும் இதைக் காணலாம். நாய், பூனைகள் வலுக்குறைந்த குட்டிகளைத் தின்று விடுவதும் பலர் அறிந்த செயல்களே. குடும்ப வாழ்வு இணையிணையாக அமையாத உயிரினங்களின் நிலையே இது!

கீழின உயிரினங்களிலும், தொடக்கக்கால மனித இனத்திலும், இன்றைய மனித இனத்திலேயே நாகரிகமற்ற இனங்களிலும்,வகுப்புக்களிலும், காதல் வாழ்வில் போராட்டமும் பூசலும் போட்டிகளும் மிகுதி நிகழ்வதுண்டு. ஆனால், உணவுயிர்ப்போராட்டக்காலத்திலில்லாத பல புதிய உணர்ச்சிகள், பண்புகள் காதற்போராட்டத்தால் உயிரினங்களிலும் மனித இனத்திலும் மனித இனங்களிலும் வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன!

உணவுயிர்ப் போராட்டத்தின் வீரம் காதல் போட்டியில் போட்டியிட்ட ஆண்களிடையே ஓர் ஆண் மற்றோர் ஆணை விலக்குவதிலும், அவ்வீரத்தைப் பெண்ணுக்குக் காட்டி, அதன் ஆர்வப் பாராட்டைப் பெறுவதிலுமே பயன்படுத்தப் பட்டது. அழிவு நோக்கத்துக்கே பயன்பட்ட வீரம் இங்கே ஆக்கத்துக்குப் பயன்பட்டது.

ஆணுக்கு வீரம் அழகு தருவது என்ற எண்ணம் இன்றுவரை மனித இனத்தில் ஏற்பட்டிருப்பதன் காரணம் இதுவே. உண்மையில் காட்டுநிலையில் ஆணைவிடப் பெண்ணுக்கே வீரம் மிகுதி என்பதைப் பெண்புலி வாழ்வும், பெண் தேள் வாழ்வும், 'காளி' வழிபாடும் காட்டவல்லன.

புதிய பண்புகளின் தோற்றம்

உணவு உயிர்ப் போராட்டம் ஓர் உயிரின் வெற்றி, மற்றதன் தோல்வி அல்லது மாள்வில் முடிவுற்றது, அது கொலைப்