பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

||--

அப்பாத்துரையம் – 18

போராட்டமாயிருந்தது. காதற் போராட்டத்தில் போராட்டம் தொடக்கத்திலிருந்தே உணர்ச்சி கலந்த இன்பப் போராட்ட மாயிற்று. அதில் ஆண் பெயரளவில் தான் வெற்றி பெற்றதாக நினைத்தாலும், 'தோல்வி'யை வெற்றியாகப் பெண் நாடத் தலைப்பட்டது. போராட்டத்தை அது தன் விருப்பு வெறுப்புக் காட்டும் பண்பாகவும், இறுதி வெற்றியின் இன்பம் பெருக்கும் பண்பாகவும், நிலையாக வெற்றிகளைத் தூண்டும் பண்பாகவும் பயன்படுத்தத் தொடங்கிற்று.

தோல்வியில் வெற்றி கண்ட பெண்மை அறிவு மரபையும், கலை மரபையும் உயிரினத்தில் தோற்றுவித்தது. அறிவு மரபு ஊடற் பண்பிலும், கலை மரபு கவர்ச்சியால் வெற்றி பெறும் பண்பிலும் வளர்ந்தது.

உயிரினங்களிலே கவர்ச்சி, தொடக்கத்தில் பல்வேறு பயனோக்கத்துடன் கையாளப்பட்டது. செடியினம் முதல் முதல் கவர்ச்சியை நாடியது ஆண் பெண் கூட்டத்துக்கன்று. விதைகளைப் பரப்பி இனப் பெருக்கத்துக்கு உதவும் வேலையில் பறவைகளையும் பிற உயிரினங்களையும் ஏவல் கொள்வதற்காகப் பல செடியினங்கள் பழங்களுக்கு வண்ணமும் சுவையும் மணமும் ஊட்டின. இதற்குப் பிற்பட்டு, ஆண் மலரின் பூந்துகளைப் பெண் மலர்மீது சேர்ப்பிக்க வண்டு தும்பிகளை ஏவும் பணியிலேயே அவை பூக்களுக்கு அழகு வண்ணமும் மணமும் தந்து அவற்றில் சுவையுடைய தேனும் சேர்த்தன.

செடி கொடியல்லாத உயிரினங்களிலே முதல் முதல் கவர்ச்சி உணவுயிர்ப் போராட்டத்துக்கே உரியது. இன்று பெண்ணின் கண்ணழகு கொல்லும் அழகு என்று கவிஞர் வருணிப்பதுண்டு. பாம்பின் அழகும் சிங்கத்தின் அழகும் மயிலின் அழகும் இங்ஙனம் உணவுயிர்ப் போராட்டத்தில் எதிரிகளை மயக்கிக் கொல்வதற்காக ஏற்பட்டதே. சிங்கத்தின் முழக்கம்கூட இவ்வகைக்குப் பயன்பட்ட ஒன்றே. இவ்வினங்களில் அழகு ஆணின் உடைமையாய் இருப்பதன் காரணம் இதுவே.

தொடக்கத்தில் கொலைக்குப் பயன்பட்ட இந்த அழகு, வீரத்தோற்றம், குரல் ஆகியவை ஆணுக்குக் காதலிலும் பயன் பட்டது இயல்பே. ஆனால், இத்தகைய சிறுபான்மை