பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

79

இஃது இன்றுவரை உலகிலுள்ள ஒரு புதிர், பெண்மை பற்றிய மாயப்புதிர், பெண்கள்கூட அறிந்துகொள்ளாத மாயப்புதிர்!

இதற்கு விளக்கம் யாது?

திருவள்ளுவரும், திரு.வி.கலியாண சுந்தரனாரும் மட்டும் வேறு வகைக் கருத்துரைத்ததன் மறைதிறவு யாது?

பெண்மைத் திறமறிந்த இரு பேரறிஞர்கள்

ஆணின் உணர்ச்சி, அறிவு இரண்டும் இயங்கும் உணர்ச்சி, இயங்கும் அறிவு! இயங்குவதிலேயே அஃது இன்பம் காண்பது. பெண்ணின் உணர்ச்சி, அறிவு தொடக்கத்திலிருந்தே இயக்கும் உணர்ச்சி, இயக்கும் அறிவாக இயன்றது. இயங்குவதில் அஃது இன்பம் காணவில்லை. இயக்குவதிலேயே கண்டது. இது புற

ன்பம் அன்று; அக இன்பம். இயக்கிய இயக்கம் நுகர்வதில் இதன் இன்பம் இன்னும் பெருக்கமுற்றது. இன்னும் அக நோக்கிற்று. தம் விருப்பப்படியே நடக்கும் சிறுவர் சிறுமியர் வாழ்வில், சில சமயம் தம் சொல்லும் புற விருப்பமும் கடந்து அக விருப்பப்படி நடக்கும் சிறுவர் சிறுமியர் வளர்ச்சியில், தாய் தந்தையர் காணும் அடங்கிய வெளிப்படக் கூறாத இன்பத்தையே, ஆடவர் உலகியல் வாழ்வில் பெண் பெற்றாள். ஆடவர் சமய வாழ்வில் ‘பேரின்பம்' என்று கனவு காணும் இன்பம் ‘பெண்மைக் கடவுள்' இங்கே 'பெண்மைப் பண்பு' பேணும் அளவில் என்றும் காணும் இன்பமேயாகும்.

பேரின்பம் காணும் பெண்மையின் இயற்கைத் திறம், அடங்கிய அறிவின் திறத்தால் அறிவையே இயக்கும் அவன் ஆற்றலின் பண்பு ஆகிய இரண்டும் அவளை உலகுக்கு அப்பால் நின்று பார்வையாளராகவே வாழ்வை நுகரத் தூண்டிற்று.

பெண்ணின் இந்த அடங்கிய அறிவையே தமிழர் 'மடம் (Modesty) என்றனர். தான் தெரிந்தும் ஆண் தெரியும்படி தூண்டி ஆணின் அறிவை இயக்குவதற்காகத் தெரியாதது போலப் பாவிக்கும் அவள் பழக்க மரபை நாணம் என்றனர். இது வகையில் தன்னையே தனக்கு மறைத்து ஆணின் கற்பனையில் வளர்ந்து வரும் 'மெல்லியலாள்' பண்பைப் பேணிப் பயில்வதைப் 'பயிர்ப்பு' என்றனர். இதற்காகத் தான் மேற்கொள்ளும் செயலற்ற