பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் – 18

தன்மையையே ‘அச்சம்' என்று நாம் கூறக்கேட்டு மகிழ்கிறது. பெண்மையுணர்ந்த பெண்மை அறிவுத் தெய்வம்!

இவற்றைக் கண்டுணர்ந்தே திருவள்ளுவர் வாழ்வை ஒரு காரியமாக்கி,ஆணை அதில் ஒரு கருவி மட்டிலுமாக்கி, உணர்ச்சி, அறிவு, செயல் ஆகிய முத்துறைகளிலும் பெண்ணையே இயக்கும் முதற் காரணமாக்கினார்.

'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற குறட்பாவுக்கு எத்தனை உரைகள், எத்தனை விளக்கங்கள்! உரை வகுத்த ‘ஆணறிஞர்’எவரும் இக்கருத்துக் கூறிய உலகப் பேரறிஞனைக் கண்டிலர்!

கோவலனைக் கண்டிக்க அஞ்சிய கண்ணகி பாண்டியன் முன் அஞ்சா நெஞ்சங்களும் அஞ்சும் உருவம் கொண்டது இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது.

'பெண்மையின் உருவம் அறிவு' என்று கூறிய பெண்மை யுணர்ந்த ஒரு தற்கால அறிஞர் திரு. வி. கலியாண சுந்தரனார். அறிவுத் துறையில் பெண்டிர் புகழ் பெறாததற்குரிய காரணத்தை அவர் அணியழகுபடச் சுட்டிக்காட்டினார். ஆடவரில் பெண்மையுடையவரே அறிஞர் என்று அவர் கருத்துரைத்தார்.

உலகின் பெண்ணறிஞர் பலர், பெரும்பாலும் பெண்மையில் ஆண்மையை மேற்கொண்டவர்கள்; ஆடவரைச் சித்திரிப்ப திலேயே அவர்கள் திறமையுடைய வராகியுள்ளனர். அவர்கள் படைத்த பெண்டிரோ ஆடவர் கற்பனைக்கே உருவம் கொடுத்து அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆண் புனைபெயருடன் புனைகதை யியற்றிய ஓர் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஆணன்று பெண் என்று அறிந்தபோது, உலகம் வியப்படைய நேர்ந்தது.

ஆணையியக்கும் திறம் பெண்டிர்க்கு உண்டு. அறிவுப் பண்பில் அவர்கள் மனித உலகின் முன்னணியில் நின்று பயின்றதன் பயன் இது. ஆனால், பெண்களை இயக்கும் திறம் பெண்களுக்குகூடக் கிடையாது. பெண்மையின் மாயை கண்டு வியந்தவர்களுள் எத்தனையோ மாயப்பெண்டிர் உண்டு. கடவுளை மனித இனம் முதலில் பெண்ணுருவாகப் படைத்த