பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

81

தற்கும், இன்றும் பெண்ணை மாயையென்றும் மாயையைப் பெண்ணென்றும் சித்தாந்த வேதாந்த அறிவுநூல்கள் புகலுதற்கும், இகழும்போதும் பேய்களில் ஆணும் கற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை மறந்து பெண் பேய் என்பதற்கும் இதுவே காரணம் என்னலாம்.

பெண்ணின் பேராற்றலும், அதை ஒழுங்குபடப் பயன்படுத்தாவிட்டால் நேரக்கூடும் பேராபத்தும் அறிந்த ஒரே உலகப் பேரறிஞராகத் திருவள்ளுவர் விளங்குகிறார்!

குடும்பம் கடந்த வளர்ச்சி

ன வாழ்வைப் பேணியவள் பெண்; அதை வளர்ப்பவன் ஆண். இடப் புறமும் வலப்புறமும் உயிரினங்களின் உ உறுப்பு களிலேயே இவ்இருதன்மைகளுக்குமுரிய சின்னமாக அமைகின்றன. இடக் காலூன்றி நின்று நாம் வலது காலால் முன்னேறுகிறோம். டக்கண் வடிவு நோக்க வலக்கண் உருவமைதி காண்கிறது. இடக்கை ஊன்றி எழுந்து வலது கையால் செயலாற்றுகிறோம். டக்கையால் வில் பிடித்து வலக்கையால் அம்பு எய்கிறோம். இடக்கையால் தாள் பற்றி வலக்கையால் எழுதுகிறோம். பெரும்பாலும் எழுத்து இடம் தொடங்கி வலஞ்செல்கிறது. டக்கைச் சின்னமான பெண் வாழ்வின் அனுபவம், வாழ்வு முதல், வாழ்க்கைப் பண்பு பேண, வலக்கைச் சின்னமான ஆண் வாழ்வின் செயலுறுப்பாய், பெண் இதயம் விரும்பியபடி, பெண் மூளை ஆணையிட்டபடி, பெண் நாடி நரம்புகள் இயக்கியபடி இயக்கிய அளவில் செயலாற்றுகிறாள்.

ஆணின் சிறப்பு அவன் வாழ்க்கையலையின் முகடு என்பதே. பெண்ணே அலையாய், தன் வளர்ச்சியை ஆணின் வளர்ச்சி யாக்கி, அவனையே தன் உயிராக, தலையாகக் கொண்டு பேணுகிறாள், பிள்ளையைப் பேணும் தாய்போல!

குடும்பத்தில் நடுவிடம், நடுநாயகம் தாய்க்கு! தந்தைக்கு அதை அளித்த பின்னும் இன்றும் என்றும் எல்லா உறவும் தாய்வழி உறவே. குடும்பத்தில் பெண்ணுக்குரிய நடுநாயக இடமே சமுதாயத்திலும் இனத்திலும் நீடிக்கிறது. ஏனெனில், சமுதாய விரிவு முற்றிலும் அவள் செயலே. தொடக்கக்கால மனித நாகரிகத்தில்,காதல் குடும்பத்துக்குள்ளேயே நடைபெற்றது. இதை