பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அப்பாத்துரையம் - 19

துணையாயின. பேரவையோ மன்னர் கொலுவிருக்கையில் பொதுவாக அவர் விருப்பத்தையே பெரிதும் நிறைவேற்றும் பொம்மைக் கொலுவாயிற்று.

குடியரசர் முடியரசர் தோன்றிய வகை

குடியரசர்களுள் பலர் நாகரிகத் தொடக்கக் காலக் குலபதிகளாகவே இருந்திருத்தல் கூடும். ஆனால், நாகரிகம் வளர வளர அவர்கள் குடிகள் உரிமை வளர்ந்து ஐம்பெருங் குழு, எண்பேராயம், பேரவை வலுவடைந்து, இறுதியில் அவர்கள் குடியரசுகளின் முதல்வராயினர். குறும்பர், திரையர், ஆந்திரர் நிலை இதுவே. அவருட்சிலர், வணிகக் குடியரசுகளின் முதல்வராகவும் இருந்திருக்க லாம். எப்படியும் சங்க காலத்துக்கு நெடுநாள் முன்னரே குடியரசர் ஆட்சியிலும் சரி, முடியரசர் ஆட்சியிலும் சரி, குடியரசுகளிலும் சரி, குடும்பத்துக்கு ஒரு ஆட்சிப்பொறுப்பு மொழி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

சங்க காலம்வரை தமிழகத்தில் மூன்று அரசரன்றி வேறு எவர்க்கும் ‘முடி' உரிமை கிடையாதென்ற கொள்கை மிகவும் வலியுறவு பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அதே சமயம் பல குடியரசர் தாமும் முடியரசராக வேண்டுமென்று முயன்றதையும் முடியரசர் அதனை எதிர்த்துப் பெரும்பாலும் வெற்றியடைந் ததையும் காண்கிறோம். பாரி முடி மேற்கொள்ள முனைந்த தாலேயே மூவரசரால் அழித்தொழிக்கப்பட்டான்.மலையமான் திருமுடிக்காரி முடியை மேற்கொண்ட பின்பே முடியரசரால் தாக்குண்டு அழிந்தான். காஞ்சியில் தொண்டைமான் இளந்திரையன் சிலகாலம் சோழ அரசையே கைக்கொண்டு பேரரசனாக நிலவியும் விரைவில் கரிகாலனால் ஒடுக்கப்பட்டு விட்டான். சங்க காலத்திறுதியில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் அவன் மீண்டும் முடியரசனாகி பாண்டியப் பேரரசருடன் போட்டியிடவல்ல பேரரசனானதாக அறிகிறோம்.

குடியரசர், முடியரசர் ஆகிய இருதிறத்தாருள், குடியரசு நிலையே முற்பட்டது என்பதை ச் செய்திகள் காட்டும். அப்படியானால் தொல்காப்பிய கால முதலே மூவரசர் பழைமை மரபு எல்லாம் நீடித்ததென்று நாம் ஆராயப் புகுந்தால், முடியரசர்