பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

||-

அப்பாத்துரையம் 19

பண்பையோ உணர முடியாது. இவற்றை உணராமல் தமிழ் வளர்ச்சிக்கு வழி காண்பதும் அரிது.

தமிழியக்கத்துக்கு யாழ்ப்பாணம் தலைமை வகிக்கும் வரை அதுமொழியியக்கமாயிருக்க முடிந்தது. ஆனால், இலங்கையிலே உள்ள தமிழ்த் தொழிலாளர் உரிமை, பிற கடல்கடந்த தமிழகத் தொழிலாளர் உரிமை ஆகியவற்றுக்கான தொண்டாற்றி, அவர்களை உயர்வுபடுத்துதல் வேண்டுமானால் தமிழியக்கம் தமிழரியக்கமாய்த் தீருதல் வேண்டும். தமிழ்நாடு அரசியல் உரிமை பெற்றாதல் வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டில் தமிழியக்கம் தமிழரியக்கமாக வளரவேண்டிய தாயிற்று. ஆனால், நெடுங்காலம் அது தமிழரியக்கமாகவும் நின்றுவிட முடியவில்லை. தமிழகம் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதி. அதனுடன் அரசியலில் அஃது இணைக்கப்பட்டு உள்ளது. துணைக்கண்ட முழுவதையும் ஆட்டிப் படைத்துவரும் அயற்பண்பு வடநாட்டை முற்றிலும் அடிமைப்படுத்தித் தென்னாடெங்கணும் பரவி, அதன் பண்பாட்டை மாற்றியமைத்துத் தமிழகத்தை யும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. தமிழர் வாழ்வும் பண்பும் பொருளாதார நிலையும் மட்டுமன்றி, அவர்கள் மொழியும் இதனால் பெரிதும் பாதிக்கப்படவே செய்கிறது. எடுத்துக்காட்டாக, இலங்கையிலும் தமிழ் மொழியோடு சிங்களம் என்ற மற்றொரு மொழி இருக்கிறது. தமிழர் அங்கும் பெரும்பான்மையினர் அல்லர். ஆயினும், தமிழ் அங்கு சிங்களத்துடன் சரிசமமாக நாட்டு மொழியாய், கல்வி மொழியாய் இயங்குகிறது. தமிழர் மீது சிங்களத்தை அங்கே யாரும் திணிக்க முற்படவில்லை. சமய, நாகரிகத் துறைகளில் சிங்களவர் பாளி மொழியை மேற்கொண்டவர். ஆயினும், தமிழர்மீது அவர்கள் பாளி மொழியைச் சுமத்துதல் வேண்டு மென்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ முயலவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் மொழியாக இந்தியும், நாகரிக சமய மொழியாக வடமொழியும் நேரடியாகத் திணிக்கவும் படுகின்றன. மறைமுகமாகப் பிரச்சார பீரங்கிகளின் உதவியால் பரப்பவும்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் தமிழியக்கம் வெறும் மொழியியக்கமாகவோ வெறும் அரசியல் இயக்க மாகவோ இருந்தால் தமிழ்கூடப் பாதுகாக்கப்பட முடியாது, தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் பாதுகாக்கப் பட முடியாதென்று கூறுதல் வேண்டுவதில்லை.