பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

91

ஆட்சியாகத் திகழும். தமிழரிடையே அன்று பிறமொழி படிப்பவர், உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர். ஆகவே, தமிழ்ப் புலவர் உலக அறிவுடையவராகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவர். பிறமொழி பயிலமாட்டாத தொழிலாளர், ஏழைகள் அன்று தமிழிலேயே எளிதாகவும் குறைந்த காலத்திலும் விஞ்ஞானம் கற்பர். தனித் தமிழராகிய இத் தொழிலாளத் தமிழர் விஞ்ஞானத்தில் தம் தமிழ் மரபிலேயே சொல்லாக்குவர். அவர்கள் விஞ்ஞான அறிவும் பள்ளிப் படிப்பாய், வாயாடும் அறி வாய் இராமல், அறிவைத் தாண்டிச் செயலுக்குப் பயன்படும் விஞ்ஞானமாயிருக்கும். தமிழர் ஒரு சில அயல் மொழிகளுக்கு அனைவரும் கட்டுப்படாமல், விரும்பிய உலக மொழிகளைக் கற்று அந் நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பிலும் முன்னேறுவர் என்பதில் தடையில்லை.