பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பகுத்தறிவும் – இயல்நூல் வளர்ச்சியும்

மேல் திசையில் இயல் நூலாராய்ச்சியும், இயல் வளமும் பெருக்கமடைந்துள்ளன-பெருகி வளர்கின்றன. அதன் ஆற்றல் மக்கள் வாழ்விலும், நாட்டு வாழ்விலும் வளமும் வளர்ச்சியும் உண்டுபண்ணி உள்ளன. ஆனால், கீழ்த் திசையில் இயல்பாக யல்நூலாராய்ச்சி எழவில்லை-இயல் நூல்வளமும் ஏற்பட வில்லை. இயல்நூலறிவின் ஆற்றல் மட்டுமே பரவியுள்ளது.- அதன் அறிவும் பரவிவருகிறது. ஆனால், மேலை நாட்டில் விளங்குவதுபோல அது பயிர்வளமாய் இயங்கவில்லை; இறக்குமதியாகும் நெல் வளமாக மட்டுமே அமைந்துள்ளது. பயிரிடும் முயற்சி அரிது என்பது மட்டுமன்று; பயிர்வளம் தரும் நிலவளம், உரவளம் இங்கு ஏற்படவில்லை.

மேலை நாடுகளில் இயல்நூலாராய்ச்சியும், இயல்நூல் வளமும் உயிர்வளங்கள்-உயிர் வளர்ச்சிகள். அவை கல்லூரி பல்கலைக் கழகங்களில் பிறந்து வளர்பவை. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அவற்றை ஊக்க, அவற்றுக் கான உரம் பெருக்க மட்டுமே முயல்கின்றன. ஆனால், கீழ்த் திசையிலோ மக்கள் வாழ்வில் இயல்நூல் தோன்றவுமில்லை-வளரவுமில்லை- இனித் தோன்றுவதற்குரிய முயற்சிகளையும் யாரும் தொடங்க வில்லை, திட்டமிடவில்லை, கருதவில்லை, கனவு காணவில்லை! இங்குள்ள கல்லூரி, பல்கலைக் கழகங்கள், கலை நிலை யங்கள் மேலை இயல் நூலறிவின் வளத்துக்கு ஒரு விளம்பர மேடை யாகவும் அவற்றின் ஆற்றல்கள்-வளரும் தொழில்களின் வாணிகத் துறைக்கு ஒரு நிலையான விளம்பர அமைப்பாகவும் மட்டுமே இயங்குகின்றன. ஏனென்றால், படித்துப் பட்டம் பெறுபவர்- இயல்நூல் பட்டம் பெறுபவர்கள்கூட- அதனால் மேலையுலக நாகரிக ஆட்சியின் பலவகை விளம்பர அமைப்புகளில் ஊதியம் பெற்று, அவ்வாட்சியை வளர்ப்பவர்களாக அமைபவர்களே