பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

95

மூடி மறைத்துவிடுகின்றன. திருவள்ளுவர் பண்பு தமிழகத்தில் கீழ்த்திசையுலகச் சமுதாய வாழ்வில் படாமலும், பட்டாலும் ஊன்றாமலும், ஊன்றினாலும் உயிர்ப் பண்பு பரவாமலும் அவை தடுத்து நிறுத்திவிடுகின்றன.

சமற்கிருதப் புராண திகாசங்கள் மட்டுமன்றி, இலக்கியமும் சமயநெறியும் அவ்வப்போது திருவள்ளுவர் மொழி போன்ற மொழிகளில் பயில்கின்றனவாயினும், அவை பசப்புரைகளேயன்றி, வற்புறுத்தப்படும், விளக்கப்படும் உரைகள் அல்ல. ஏனெனில், அவை பெரும்பாலும் தன்னலமும் சூழ்ச்சியும் பரப்பி, அவற்றுக்குப் பெரும்பாலான மக்களை அடிமையாக்கும் திட்டத்துக்குரிய கவர்ச்சி கரமான பூச்சுகளேயாகும்.

கலை, சமுதாயம் ஆகிய துறைகளில் வளரும் - வளர்க்கப் படும் இந்த நச்சுப் பண்புகளுடன், அரசியல் அடிமைத்தனமும், மொழியடிமைத்தனமும் சேர்ந்து வளர்கின்றன. தேசிய வாழ்வின் அடிப்படையான தொழிலாளரும், பெண்டிர்களும், அவர்கள் வாழ்வுகளுக்குரிய தாய்மொழியும் அடிப்படைக் குடியாட்சி தேசிய உயிர்ப் பண்புகளும் நசுக்கப்படுகின்றன.

அயல்மொழி ஆட்சியுடன் எப்போதும் புரோகித முதலாளித்துவம், நிலப்பண்ணை முதலாளித்துவம், வாணிக முதலாளித்துவம், தொழில் முதலாளித்துவம், பண முதலாளித்துவம் ஆகியவை இணைந்து, கீழ்த் திசையில் மக்கள் வாழ்வையே ஒரு நோய்க் களமாக்கியுள்ளன.

இயல்நூல் இவற்றை யழிக்க உதவுதல் வேண்டும். ஆனால், இயல்நூல் வளராமல் இவை தடுத்தாளுகின்றன. அறிவியக்கத் தார்தாம் இவற்றுக்காவன செய்தல் வேண்டும்.