பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

6

அப்பாத்துரையம் - 19

சங்ககால ஔவையார்க்குப் பன்னூறாண்டு பிற்பட- வள்ளுவர்க்குப் பல்லாயிரஆண்டு பிற்பட-வாழ்ந்த அணிமைக் கால ஔவையார்கூட வள்ளுவப் பண்பின் அரை ஒளி நிழலில் நின்று 'இல்லறமல்லது நல்லறமன்று என்று பாடியுள்ளது காணலாம். 12 அல்லது 16ஆம் நூற்றாண்டு வரையிலாவது வள்ளுவர் உயர் குறிக்கோள் ஒரு சிலரிடமாவது மங்கி மங்கி மின்னொளி வீசிற்று என்பதை இது காட்டுகிறது.

து

இல்லறம் ஒன்றே அறம். அறம் ஒன்றே. அது மட்டுமன்று. அதனால் வரும் இன்பமும் ஒன்றே.

வள்ளுவர் கொண்ட துறவறம் இல்லறத்துக்கு மாறானதோ, எதிரானதோ அன்று. அஃது இல்லறத்தின் கனிந்த முதிர்வே, அதன் விரிவேயாகும். வீட் டெல்லையில் சமுதாயம், நாடு மொழி, இனம் என விரிவுறுந்தோறும் அது பல படியான துறவறங்களாக உருக் கொள்கிறது. அவையும் இல்லற வகைகளேயாத லால்தான் வள்ளுவர் இல்லறத்துக்கும் பொதுவாகத் தந்த அதே உயர்வு சிறப்பைச் சிறப்பாகத் துறவறத்துக்கும் கூறினார்.

'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்’

துறவோரின் தவவாழ்வை (தியாகப் பொதுத் தொண்டை) அங்கே வள்ளுவர் உயர்வுபடுத்தி, அது மேற்கொள்ளாதவரை மெல்ல நகையாடுகிறார். 'துறவோர்க்கு இவ்வளவு புகழ் வருகிறதே, அப் புகழை வளர்ப்பதற்காகத்தான் மற்றவர்கள் அதே வழியைச் சற்று மறந்திருக்கிறார்கள் என்று கூறுதல் வேண்டும்' என்கிறார் அவர்.

இல்லறத்தார் பொதுவாகக் குடும்பம் என்ற சிற்றெல்லையிலே பெறும் இன்பம் சிற்றின்பம். இடைக் காலத்தவரால் ‘சிறு’ என்ற சொல் இங்கே சிறுமை, கீழ்மை என்ற பொருளில் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. காதல், காமம் என்ற மற்ற உயர்ந்த தமிழ்ப் பண்புகள் குறித்த சொற்களைப் போலவே தமிழர் அடிமை யிருட் காலங்களில் இதுவும் இழிந்த அடிமைப் பொருள் குறித்து விட்டது.உண்மை யில் சிறிய யாழ், சிறிய இடை என்ற இடங்களில் சிறுமை இழிவு குறிக்கவில்லை. இனிமை, நுண்ணயம், நுட்ப அழகு நலம் ஆகிய பண்புகளே குறித்தன. சிற்றின்பம் இப்