பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

99

பொருளே கொள்ளவல்லது. பேரின்பம் இதனைவிட எல்லைப் பரப்பில் பெரிது. ஆனால், நுண்ணயத்தில், ஆழத்தில், முழு நிறை நலத்தில் சிற்றின்பத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. இதுபோல் விரிவுற்ற இல்லறமாகிய துறவறம் பொது இல்லறத்திலும் விரிந்த எல்லையுடைய தானாலும், முழு நிறை நலத்தில் அப்போது இல்லறத்துக்கு ஈடாகாது. இஃதுணர்ந்தே வள்ளுவர் பொதுவான இல்லற, துறவறங்களை அறத்துப் பாலில் வைத்து, அவற்றை, இயற்கை நெறி அல்லது அறத்தின் பால் வைத்தார். பின் அவற்றின் கருவி நயங்களைப் பொருட்பாலில் விதந்தோதியபின், மீண்டும் பொது இல்லறத்தின் நுணுகிய ஆழ்ந்த காதற் சுவையிலேயே திளைக்க முற்பட்டார்.

பொதுவான இல்லறம் - இன்பம்! சிறப்பான துறவறம் பேரின்பம்! ஆனால், இந்த இரண்டும் கடந்த சிறப்பான இல்லறம், காதலின் அகச்சுவை ததும்பும் காதலறம் ஆகும். அதுவே இன்பம், பேரின்பம் ஆகிய இரண்டு இன்பங்களும் கடந்த நீடின்பம். இந்த மூன்றாம் இன்பமே வள்ளுவரின் மூன்றாம் பாலும் முழு நிறை பாலுமாகிய இன்பப்பாலில் விளக்கப்படும் இன்பம் ஆகும். இஃது இல்லற இன்பம், துறவறப் பேரின்பம் ஆகிய இரண்டு புற இன்பங்களும் கடந்த அக இன்பம், அகப் பேரின்பம் ஆகிய நீடின்ப வகைகள் ஆகும்.

வள்ளுவர் குறிக்கொண்ட இல்லறம், இன்பம் ஆகிய ஒருமைக் கோட்பாடுகளின் பண்புகள் நீண்ட காலமாகத் தமிழராலும் தமிழர் தாழ்வுற்ற காலை அவர்களை வந்தடுத்து அறவுரையும் அறிவுரையும் ஆன்மிகவுரையும் அளிக்க முற்பட்ட ஏனையோராலும் மறக்கப்பட்டுவிட்டன. ஆனால், இசைக் கருவியாகப் பயன்பட்ட யாழை இசை மறக்கப்பட்டபின் ஓரழகுப் பொருளாக உயிர்க் கலைப் பண்பறியாதவர் வழங்குவதுபோல, வள்ளுவர் பண்பு மறக்கப்பட்ட பின்னும் அப் பண்பைப் பல தமிழ்ச் சொற்கள் இன்றளவும் இலக்கிய மரபுகளாகவும் உயிர்ப்பிழந்த வழக்கு மரபுகளாகவும் இயக்குகின்றன.

குடும்பக் காதல் இன்பம், கடவுட் பற்றால் பெறப்படும் துறக்க இன்பம் இரண்டும் தமிழில் 'இன்பம்' என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன. ஒன்று சிற்றின்பம் என்றும் மற்றொன்று பேரின்பம் என்றும் குறிக்கப்படுகின்றன. அவற்றின்