88
தமிழ் இலக்க முறை
அப்பாத்துரையம் - 2
தமிழ் இலக்க முறையின் தொடக்க வளர்ச்சியையோ, சமற்கிருத தேவநாகரிக முறையின் தொடக்க வளர்ச்சியையோ நாம் காணமுடியவில்லை. ஆனால், தமிழ் இலக்கமுறை பின்னதனைவிட ஒருபடி முற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. உலகின் முதல் பதின்மான முறை அதுவே என்னலாம்.
கிரேக்க, அரபு முறைகளின் படிகளையும், உரோம முறையின் படியையும் கடந்தே தமிழ், தேவ நாகரிக முறைகள் முன்னேறின என்று கூறத்தடையில்லை. ஆனால், மற்ற முறைகள் தொடக்கப் படிகளில் இருக்கும்போதே இவை கிட்டத்தட்ட முழுநிறை பதின்மான முறைகளாய் இயங்கின. மற்றவற்றின் படிகளை வை வரலாற்றுக் கெட்டாத முற்பட்ட காலத்திலேயே கடந்தன என்றும் தொலை நாடுகளிலுள்ள தொடக்கப் படிகள் இங்கிருந்து பரவிய தொடக்கப்படிகளாகவே இருக்கக் கூடுமென்றும் கூற இடமுண்டு.
கிரேக்க அரபு முறைகள் தாண்டியும் உரோமமுறை தாண்டியும் தமிழ்முறை பதின்மானத்தில் பல முன்னேறியுள்ளது.
படிகள்
முதலாவதாக ஒன்று முதல் ஒன்பது வரை இலக்கங்
களுக்குத் தனிக்குறியீடுகள் உள்ளன.
இவை கடந்து, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய தானங்களுக்கே தெளிவான தனிக் குறியீடுகள் உள்ளன.
மூன்றாவதாக, தானக் குறியீடுகளாக
வழங்கிய பேரெண்களுக்கு முன் சிற்றெண்கள் அவற்றின் மடங்குகளாக வழங்குகின்றன.எடுத்துக்காட்டாகப் பத்தடுக்குகள், நூறடுக்குகள், ஆயிர அடுக்குகள் யாவும் (உÇ )=2x10=20, (உள)=2x100=200, (உசூ )=2x1000=2000 என்றவாறு) பெருக்கக் குறிப்புகளாவது
காணலாம்.
து
இன்றைய உலகின் பதின்மான வரிவடிவ முறைக்கு மிகவும் அணுக்கமானது. ஆயினும், இதற்கும் அப்பதின்மான முறைக்கும் இடையே ஒரு மிக முக்கியமான வேறுபாடு உண்டு. அதுவே தானஎண்கள் தனிக் குறியீடுகளாய் அமையாமல்,