தென்மொழி
89
சுன்னங்களின் எண்ணிக்கையால் இடக்குறியீடு ஆக அமைவது ஆகும்.
தமிழின் மாற்று இலக்க முறை
தமிழ் இலக்கத்திலேயே, மேலே அட்டவணையில் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்பட்ட இலக்கமுறை இவ்வகையில் அமைந்ததே. அது தமிழகத்தில் பெருவழக்காக முன்பு வழங்காத முறையாயினும், சிறுபான்மை வழக்காகத் தமிழகத்திலேயே தோற்றிய ஒரு மாற்று முறையே என்னலாம்.
1.
2.
3.
4.
கீழ்வரும் செய்திகள் இதைச் சுட்டிக்காட்ட உதவுகின்றன. இலக்கங்களின்
எழுத்துமுறைக் குறிப்புத் தான லக்கங்களையே வழங்குகிறது. எடுத்துக்காட்டாக முந்நூற்று இருபத்து ஏழு என்ற எண்ணில் 3,2,7 ஆகிய இலக்கங்களையும் முந்நூற்று ஏழு என்பதில் 3,0,7 எனச் சுன்னம் உட்பட்ட இலக்கங்களையுமே அது வழங்குகிறது. வானூற் கணிப்பில் பரல் எண்ணுமிடத்தில் பரற்கோடுகள் தானங் களாகவும் இலக்கங்கள் தான இலக்கங்களாகவுமே குறிக்கப்படுகின்றன. உண்மையில் பதின்மான முறையின் கடைசிப் படியான சுன்ன மரபு தோற்றிய வகையே இஃது என்று கூறலாம்.
பிற தென்னாட்டுத் தமிழின மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை சுன்ன மரபுடன் கூடிய மாற்றுமுறையே வழங்கு கின்றன. இவற்றைச் சமற்கிருத தேவநாகரியிலிருந்தோ உலக மரபிலிருந்தோ அவை பெறவில்லை. ஏனெனில், இவை அம் மொழிகளுக்கே யுரிய தனி இலக்க முறைகள்.
ா
தென்னாட்டில் அணிமையிலேயே தேவநாகரிக எழுத்து முறை பரவத் தொடங்கியுள்ளது. அணிமைவரை சமற் கிருதத்தின் எழுத்து முறையாக இருந்து வந்துள்ள எழுத்து முறை கிரந்த எழுத்து முறையே. இதன் இலக்க முறையில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள இலக்கக் குறியீடுகள் தமிழ் இலக்கக் குறியீடுகளே. ஆயினும், தமிழின் மாற்று முறையாகிய சுன்னமுறையே தானங்களுக்குப் பயன் படுத்தப் படுகிறது.