பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

எண்ணும் எழுத்தும்

93

'எண்ணும் எழுத்தும் இரு கண்ணெனத் தகும்' என்பது அவ்வை திருவாக்கு."எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும்-கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே வகுத்துச் சென்றுள்ளார். பேருண்மை

இவ் வாய்மொழியில் எவ்வளவு பொதிந்துள்ளது என்பதை உலக மொழியாராய்ச்சியாளர் மட்டுமே தெள்ளத் தெளியக் காணக்கூடும். தமிழுலகம் உலகுக்குத் தந்த செல்வங்கள் பலப்பல. ஆனால், அவற்றில் தலைசிறந்த செல்வங்கள் எண்ணும் எழுத்துமே. அவற்றைத் தமிழினம்போலப் பேணிய இனமும் பிறிதில்லை என்னலாம்.

இன்று உலகில் கீழ்நாடுகளும் தமிழகமும் கல்வியில் மட்டுமன்றி அடிப் படைக் கல்வியான எண்ணெழுத்தறிவிலும் மிகவும் பிற்பட்டேயுள்ளன. ஆனால், இது நேரடியாகத் தமிழினத்தின் குறையன்று. தமிழர் குடியாட்சிக் காலத்தில் வளர்த்து உலகெங்கும் பரப்பிய சீரிய பண்புகள், முடியாட்சி ஏற்பட்ட காலமுதல் படிப்படியாகச் சீரழிவுற்று, அயலின அயல் பண்பாடுகளுக்கும், பண்பாட்டில் குறைந்தோரின் ஆதிக்கத்துக்கும் வழிவகுத்துள்ளது. இன்றைய நிலை நீடித்த அடிமைப் பண்பின் விளைவேயாகும்.

பழைய கால நிலையைச் சங்க இலக்கியங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இக்காலத்தவர் அதை உள்ளவாறு காணாததும் காண எண்ணாததும் அடிமை மனப்பான்மை யினாலேயே என்னலாம். அச்சுப் பொறி ஏற்படாத அந்நாளில் பனையோலையன்றி எளிய எழுதுபொருள் காணப்படாத நிலையில், கல்விக்குரிய வசதிகள் உலகெங்கும் குறைவாகவே இருந்திருக்க முடியும் என்பது தெளிவு. ஆனால், இத்தகைய காலத்திலும் தமிழர் பேரிலக்கிய இலக்கண வளம் எய் தியிருந்தனர். அதன் ஒரு சிறு பகுதியே தொல்காப்பிய வடிவிலும், சங்க இலக்கிய வடிவிலும் நம்மை வந்தெட்டியுள்ளன. எட்டியுள்ள பகுதியே இன்றளவும் உலகில் ஈடிணையற்ற வியத்தகு பண்புகளை உடையன.

சங்க இலக்கியம் குறிப்பிடத்தக்க நிலையிலும் அளவிலும் உலகின் மிகச் சிறந்த சமயஞ் சாரா உயர் இலக்கியமாகக்