பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

97

நூலாகிய அவெஸ்தாவும், இந்திய ஆரியரின் மறைநூலாகிய இருக்கு வேதமும் மனித இன வரலாற்றில் காலத்தால் பிந்திய இடைக்காலத் தவையானாலும், தன்மையால் இம் முதற்படி சார்ந்த இன இலக்கியங்களேயாகும்.

குடிவாழ்வும் சமுதாயமும் அமைந்தபின் இன இலக்கியம் சமுதாய இலக்கியமாகிறது. இஃது எழுதாச் சமுதாய இலக்கியமே. ஏனெனில், இதுவும் எழுதப்படாமல் மரபு வழியே வளர்ந்து வந்ததாகும். நாட்டுப் பாடல்கள். வீரக் கதைகள், சமூகப் பழங் கதைகள், சமய விளைமுறை இலக்கியங்கள், ஆடல்பாடல், நாடக இலக்கியங்கள் ஆகியவை இந்தப் படியைச் சார்ந்தவை.

தமிழன்னையாகிய அவ்வையார் போற்றிய ஏற்றப்பாடல் வ்வகைப்பட்ட சமுதாயப் பாடலேயாகும். குறவஞ்சி, பள்ளு, அம்மானை முதலிய தமிழ்த் துறைகளும் இம்மரபினவே.

இவ்விரண்டு படிகளிலும் மொழியின் உயிரைக் காணலாம். னம் அல்லது சமுதாயத்தின் வளர்ச்சியைக் காணலாம். ஆனால், இவற்றில் தனி மனிதன் இடம் பெறுவதில்லை. இனத் தலைமுறைகளும் சமுதாயத் தலைமுறைகளுமே அவற்றை ஆக்கியியக்கி வளர்க்கின்றன. சமற்கிருத புராண, இதிகாச, சுமிருதிகள் சமுதாய லக்கியங்களில் பிற்காலத்

தொகுப்பேயாகும்.

இன ஆட்சியிலும் சமுதாய ஆட்சியிலும் வீரர், மன்னர், குருமார் இடம் பெற்றனர். ஆனால், இவர்கள் சமுதாயத்தில் ஒரு மரபினராக ஆண்டனரேயன்றி, இன வாழ்வை இயக்கவில்லை. தனித் தன்மையும் பெறவில்லை. இவர்களுள் எவர் பெயர்களும் நம்மை வந்து எட்டாததன் காரணம் இதுவே. ஆட்சி செய்தவர் தம் ஆட்சிக் காலத்துடன் மறைந்தனர். புதிய ஆட்சியாளர் புகழ் புதிய ஆட்சிக் காலத்தில் நிலவிற்று.

முதல் முதல் இன வாழ்வையோ சமுதாய வாழ்வையோ தலைமுறை கடந்து தலைமுறையாக இயக்கத் தலைப்பட்டதனி மனிதர்கள் பலர். இவர்களே இன முதல்வர், குலமுதல்வர் என்றும், தெய்வங்கள் என்றும், சமய முதல்வர் அல்லது இலக்கிய முதல்வர் என்றும் பல பெயர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.பாரசீக நாட்டில் ஜரதுஷ்டிரர், சீனத்தில் கன்பியூசியசு, யூதரிடையே,