தென்மொழி
ஐந்திரம் பற்றிய புத்தொளி
107
தமிழில் அகத்தியர் மரபையும் வடபுலங்களில் ஐந்திர மரபையும் போற்றியவர்கள் சமணர்களே. ஐந்திரத்தின் வழிநூல்களாகப் பல மொழிகளிலும் அவர்கள் இலக்கணங்கள் இயற்றினர். அவற்றுள் ஒன்று காதந்திர மென்ற பிராகிருத இலக்கணம்.
பெருங்கதை அல்லது பிருகத் கதாவின் முன்னுரை ஐந்திர இலக்கணத்தை ஒரு புத்தம் புதிய இலக்கணமாகக் குறிப்பிடுகிறது. ‘அதற்கு முன்னிருந்த இலக்கணங்களைவிட அது சமற்கிருதத்தை எளிதில் கற்க உதவும் சிறந்த இலக்கணம் என்றும், அதன் புகழ் பரந்தபின் முன்னைய இலக்கணங்கள் ஒளியிழந்தன வென்றும் அது குறிப்பிடுகிறது.
6
தமிழ்ப்பெருங்கதையோ, சமற்கிருதத்தின் பிருகத்கதையோ முதல் நூல்களல்ல. இதை அந்நூலே குறிப்பிடுகிறது. முதல் நூலை எழுதியவன் குணாட்டியன்' என்ற பண்டைப் பெருங்கவிஞன். அவன் எழுதிய மொழி 'பிசாசமொழி' என்று நூல் குறிப்பிடுகிறது. பிசாசமொழி எது என்பது பற்றியும் ஊகக் கோட்பாடுகளே உள்ளன. உண்மை வரையறை காணப்பட முடியவில்லை. ஆனால், அம்மொழியை வளர்த்த அரசர் ஆந்திரப் பேரரசர் என்று தெரிய வருகிறது. அஃது ஆந்திரர் கல்வெட்டுக்களில் கண்ட பாளிமொழியாகவோ, பண்டைத் தெலுங்கு மொழியாகவோ, அல்லது நாகபுரியை யடுத்து இன்று பண்படா நிலையில் நிலவும் திராவிட மொழிகளுள் ஒன்றாகவோ இருந்திருக்க வழியுண்டு. அதைத் திராவிடம் மிகுதி கலந்த அல்லது மிகுதி நிறைவுற்ற பிராகிருத வகை என்றும் சிலர் கொள்கின்றனர்.
பிருகத் கதையின் சமற்கிருத மொழிபெயர்ப்பில் சமற்கிருத இலக்கணம் என்று குறிப்பிடப்பட்ட ஐந்திரம் பைசாசமொழி அல்லது தெலுங்கு மொழி அல்லது இன்று பண்படா நிலை யிலுள்ள திராவிட மொழிகளின் இலக்கணமாகவே இருத்தல் சாலும். ஏனெனில், இம்மொழியில் பிருகத் கதை போன்ற உலகக் கதைப் பேரிலக்கியம் வளர இடமிருந்தது.