பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

109

லக்கணம் அல்லது வியாகரணத்தின் பகுதியாக அன்றும், இன்றும், என்றும் சமற்கிருத வாணரால் கொள்ளப்படவில்லை.

பாணினியாலும் சமற்கிருத இலக்கண வாணராலும் இலக்கணத்தின் கூறுகளாகக் கொள்ளப்பட்டவை எழுத்தும் சொல்லும் மட்டுமேயாம்.

12-ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் நன்னூலில் இந்த இரண்டு கூறுகள் மட்டுமே உள்ளன. இஃது அவர் சமற்கிருதத்தைப் பின்பற்றியதன் பயன் என்று பலர் கருதுகின்றனர். அதேசமயம் நன்னூற் சிறப்புப்பாயிரம் ‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர' என ஐந்திலக்கண மரபைக் குறிப்பிடுகிறது.

இலக்கண விளக்கம் இலக்கணக் கொத்து முதலிய பிற்கால இலக் கணங்களில் மட்டுமன்றி இடைக்காலத்திய (கி.பி. 9ஆம் நூற்றாண்டைய) இலக்கணமாகிய வீரசோழியத்திலும் ஐந்திலக்கண மரபு தெளிவாகக் காணப்படுகிது.தொல்காப்பியத்தில் அதிகாரங்கள் அல்லது பால்கள் மூன்றாயினும், இலக்கணங்கள் ஐந்தும் அதில் அடங்கியுள்ளன. எழுத்தும் சொல்லும் ஒரு தனிப் பால்களாகவே இயங்குகின்றன. ஆனால், பொருள், யாப்பு, அணி மூன்றும் பொருள் என்ற அகலப் பிரிவின் துணைக் கூறுகளாகவே அடக்கப்பட்டுள்ளன.

ஐந்திலக்கண மரபின் உட்பொருள்

பொருளிலக்கணம் தமிழ்க்கே சிறப்பான இலக்கணம் என்பதைக் குறிக்காத ஆராய்ச்சியாளர் இல்லை. ஆனால், யாப்பும் அணியும் அதுபோலவே தமிழிலக்கணத்துக்குச் சிறப்புத் தருபவையே என்பதை மிகப் பெரும்பாலோரும் கவனித்திலர். பிற மொழிகளில் அவை இலக்கணக் கூறுகளாக அமையாதது அவற்றின் தனிச் சிறப்புக் காரணமாகவே என்று மட்டும் அவர்கள் வாளா கருதியமைந்தனர். பாணினி இலக்கணம் சமற்கிருதத்தின் முழுநிறை இலக்கண மாயினும் அதில் பொருள், யாப்பு, அணி மூன்றுக்கும் இடமே ல்லை என்பது இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

பொருள் தமிழிலக்கணத்துக்கே சிறப்பாயிருப்பதற்கும், யாப்பு, அணியும் தமிழில் மட்டுமே இலக்கணத்தின் கூறாய் அமைந்ததற்கும் வரலாற்று முறைக் காரணம் ஒன்று உண்டு.