பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

111

பாணினியின் 'பாஷா' சமற்கிருதத்தின் தாய்மொழியான அந்நாளைய ஒரு பாகத மொழியே யாகும். இதுவே பின்னாளில் இலக்கிய மொழியானபின் சமற்கிருதமாக வளர்ந்தது.

பாணினி இலக்கணம் அமைந்த காலத்தில் எழுதா இ இலக்கியமான வேத உபநிடதங்கள் இருந்தன. எழுதாச் சமுதாய இலக்கியமான இதிகாசங்கள் ‘பாஷா'வில் இயற்றப்பட்டோ, பாடப்பட்டோவந்தன. இலக்கியமில்லாத காரணத்தால் இலக்கியத்தின் இலக்கணமான யாப்பியலோ, அணியியலோ. பொருளியலோ ஏற்படவில்லை.

சமற்கிருதவாணர் என்றும் பொருளியலின் தேவையை உணரவில்லை.இன்றுகூட மேலை உலகத்தினர் பொருளிலக்கணம் போன்ற ஒரு துறையை ‘இலக்கிய ஆராய்ச்சி' என்ற பெயரால் கொண்டுள்ளனராயினும், அதைத் தமிழரைப் போல ஒரு நூலாக இன்னும் வகுக்க எண்ணவில்லை. வகுக்க முனைந்தவர் அதை வடமொழியாளர் போல 'அணிநூல்' (Rhetoric) என்று தனி நூலாக்கியுள்ளனர். அது கலையுணர்வு அறிவாராய்ச்சியுடன் எழுதப்படாததால் நூலாக மதிப்புப் பெறவும் இல்லை. ஆங்கிலத்தில் ஹட்ஸன் இயற்றிய 'இலக்கியம்' என்ற நூல் கிட்டத்தட்ட தமிழர் பொருளியலுக்குச் சரியான இக்காலப் பதிப்பு என்னலாம்.

யாப்பும் அணியும் தொல்காப்பியர் காலம்முதலே தமிழில் இருந்தன வானாலும், அதில் தமிழர் தனிக்கருத்துச் செலுத்திய காலம் 9ஆம் நூற்றாண்டே. இக் காலத்திலேயே சமற்கிருதத் திலும் அது தனிநூலாகப் புது வளர்ச்சி யடைந்தது. அதன் முதல் ஆசிரியர் காஞ்சியில் வாழ்ந்த சமற்கிருதக் கவிஞர் பாரவியின் கொள்ளுப் பேரன் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கவை.

சமற்கிருத யாப்பணி நூலான அலங்கார சாத்திரம் என்பது தொல் காப்பியமும் தமிழும் தமிழரும் சமற்கிருதத்துக்கு அளித்த செல்வங்களுள் ஒன்றேயாகும். சமற்கிருதத்தில் மிகச் சிறந்த அலங்கார நூல்கள் எழுதி யவர்களுள் மிகப் பலர் தமிழரும் பிற தென்னாட்டவருமேயாவர்.

சமற்கிருத இலக்கியக் காலம் தமிழ்ச்சங்க இலக்கியக் காலத்துக்குப் பிற்பட்டது. அதை வளர்த்த முதற் பேரரசரும் தமிழ்