பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

அப்பாத்துரையம் - 2

மூவேந்தர் ஆட்சிக் காலத்துக்குப் பின் வட சோழ நாட்டை அடக்கியாண்ட பல்லவப் பேரரசரேயாவர். இதே காலத்தில் வடக்கிலும் குப்தப் பேரரசர் சமற்கிருதத்துக்கு ஆதரவளித்து அதை வளர்த்தனர். தமிழ்ச் சங்க இலக்கியத்தின் முன்மாதிரி க்காலத்தில் புதிய தமிழிலக்கியத்தையும் அதைப் போலவே சமற்கிருத இலக்கியத்தையும் வளர்த்தது. இரண்டிலக்கியங் களிலும்அதாவதுசங்ககாலத்துக்குப் பிற்பட்ட தமிழிலக்கியத்திலும், சமற்கிருத இலக்கியத்திலும் நாம் ஒரேவகைப்பட்ட இலக்கியப் பண்பாட்டையும், ஒரேவகைப் பண்பாட்டிலக்கியங்களையும்

காணலாம்.

தொல்காப்பியமும் ஒலி நூலும்

உலகின் எந்த மொழிக்குமில்லாத ஒலியியல் எழுத்தமைதி சமற்கிருதத்துக்கு உண்டு என்பதை, இந்தியாவுக்கு வெளியே யுள்ள மேலை உலக அறிஞர் சமற்கிருதத்தின் சிறப்பாகவே கண்டு வியந்து பாராட்டினர். அதுபோல, பாணினியின் இலக்கண முறைமை, நிறைவு ஆகிய இரண்டையும் சமற்கிருத மரபுக்கே உரியதென்று ஆர்வம்மீதூரக் கொண்டாடினர். ஆனால், பாணினி கடந்து பிராதிசாக்கியங்களிலும் சமற்கிருதம் கடந்து தாய்மொழிகளிலும் கருத்தூன்றிய அறிஞர் தமிழும் தொல்காப்பியமும் இவற்றை விஞ்சிச் சென்றிருப்பது கண்டு இறும்பூதெய்தினர்.

மூன்று

ஆங்கிலத்தின் இரண்டு ககரங்கள், கிரேக்க மொழியின் ககரங்கள், சமற்கிருதத்தின் நான்கு ககரங்கள் ஆகியவற்றின் ஒலிகள்போலத் தமிழிலும் மூன்றுக்கு மேற்பட்ட ககரவொலிகள் உண்டு. ஆயினும், மூன்றையும் ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு ஒரே ஒலிக் குழுக்குறி (Phonemes) தமிழில் அமைக்கப்பட்டது. சமற்கிருத எழுத்துகள் ‘க’ வர்க்கம், ‘ச’ வர்க்கம் எனப் பிரிக்கப்பட உதவிய கூறு இதுவே என்று அறிஞர் கண்டுவருகின்றனர்.

பாணினி அடிப்படையாகவும், சமற்கிருத அடிப்படை யாகவும் அமைந்த 19-ஆம் நூற்றாண்டின் மேலை உலக ஒலியியல் தொடக்கத்தில் சமற்கிருதத்தைப் பின்பற்றிக் ககார நுகாரங்களைத் தொண்டை ஒலிகள் (சமற்கிருதம் கண்ட்யம்,