தென்மொழி
127
தனித் தமிழியக்கம் இன்னும் தமிழ் வளர்த்து வருகிறது. தமிழனையும் தமிழினத்தையும் வளர்க்கத் திட்டமிடுகிறது. அத்துடன் உலகளாவிய வளர்ச்சிக்கும் அது வித்தூன்றத் தொடங்கியுள்ளது.
மறைமலையடிகளாரின் தனித் தமிழியக்கம் தனித் தமிழ் என்ற பெயரை மாற்றிக்கொண்டு, தமிழகம் கடந்து, கீழையுலக எல்லை கடந்து, ஒரு பெரிய உலக இயக்கத்தைத் தோற்று வித்துள்ளது. அதுவே அடிப்படை மொழி இயக்கம் என்று கூறப்படும் உயிர் மொழி இயக்கம் ஆகும். தனித் தமிழ் இயக்கம் அவ்வுலக இயக்கத்தை ஈன்று, இப்போது அவ்வுலக இயக்கத்தின் உயிர்க் கூறாக நிலவத் தொடங்கியுள்ளது.
அடிப்படை மொழியியக்கத்தின் விளக்கமே தனித் தமிழ் இயக்கத்தின் புதிய வளர்ச்சிக்குரிய புது விளக்கம் ஆகும்.
கலப்பு மொழி இயக்கம்
ஒரு மொழியின் வளத்துக்கு அதன் சொற்களின் எண்ணிக்கை ஒரு சின்னம் என்று சிலகாலம் கொள்ளப்பட்ட துண்டு. ஒரு பொருட் பல சொற்களின் வளமும் மொழியின் தனிவளம் என்று கருதப்பட்டு வந்தது. இத் தன்மைகள் உயர்தனிச் செம்மொழிகளாகிய இலத்தீனம், கிரேக்கம், சமற்கிருதம் ஆகிய வற்றில் நிரம்ப உள்ளன. ஏனைய மொழிகளைவிடச் சமற்கிருதத்திலும், சமற் கிருதத்தைவிடத் தமிழிலும் அவை தனிச் சிறப்புடையவையே என்று காணலாம்.
உலகின் தற்கால நாகரிக மொழிகளான ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகள் இப்பண்புகளை, சிறப்பாக முதல் பண்பைப் பெரிதும் அளாவின. அவற்றைப் பேரளவில் பெற்றும் உள்ளன. ஆனால், அவை உயர்தனிச் செம் மொழிகளின் சொற்களைத் தமதாக்கிக்கொண்டே அவ்வளவும் பெற முடிந்தன. அயல்மொழிச் சொற்களால் பெற்ற வளத்தை அயல்மொழிச் சொற்களைக் கலப்பதனாலேயே, அவற்றைப் பெருக்குவதனாலேயே வளர்க்கமுடியும். ஆகவே, அயல்மொழிச் சொற்கலப்பு ஒரு நாகரிக முறையாயிற்று.
தமிழ் நீங்கலான இந்தியத் தாய்மொழிகள் மேலை உலக மொழிகளைப் போலவே வளர்ந்துவந்துள்ளன. சமற்கிருதச்