பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

அப்பாத்துரையம் - 2

பொற்பு, பொலிவு என்ற இரு பண்புப் பெயர்களிலும் வ்வாறு பொன், பொல் என்ற இரு வேர்ச்சொல் திரிபுகள் உள்ளன. மூலவேர்ச் சொல்லில் இறுதி மெய்ல், ன் இரண்டுக்கும் இடைப்பட்டது. அதாவது மூக்கியல் லகரம் என்று இன்றைய மொழிநூலார் ஒலி மாறுதலறிந்து கூறமுடியும்.

மெல்யாழ், மென்கரும்பு என்பதிலும் இவ்வாறே வேர்ச்சொல்லின் லகரம் மூக்கியல் லகரம் என்று கூறலாம்.

யான், என் என்ற மாறுபாடும், யாறு, ஆறு போன்ற திரிபுகளும் மூலத் திராவிட மொழியில் ஆ, ஏ ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஓர் ஒலி இருந்ததையே காட்டும். இஃது ஆங்கிலத்தில் மிகப் பொதுவாக வழங்கும் (ய என்ற எழுத்தின்) ஒலி ஆகும் (குறில்: cap, man; நெடில்: fair, share)

மொழியின் ஒலித்திரிபு, ஒலி ஒப்புமை, இனமொழி ஒப்புமை ஆகியவற்றின் மூலம் இயற்சொல்லல்லாத வேர்ச் சொல்லில் தமிழர், ஆராய்ச்சி இப்போது முன்னேற முடிகிறது. இது பாணினியின் மொழி நூற்பண்பற்ற செயற்கை முயற்சியன்று; இன்னும் முழுநிறைவுறாத முதிரா மொழி நூற்பண்பே யாகும்.

ஒரு பொருட் பல சொற்கள்

இடைக்காலத் தமிழ்,சமற்கிருதப் புலவர்கள் ஒரு பொருட் பல சொற்களின் வளத்தில் எவ்வளவோ பெருமை கொண்டார்கள். இது புரியக்கூடியதே. 'எங்கள் மொழியில் ஆனைக்கு அறுபது சொற்கள் உண்டு. எருமைக்கு இருபது சொற்கள் உண்டு' என்று தமிழ்ப் பற்றாளர் ஒரு புறமும், சமற்கிருதப் பற்றாளர் மற்றொரு புறமும் போட்டியிடுவதுண்டு. உண்மையில் உலகின் வேறெம் மொழிகளையும்விட இந்த இரண்டு மொழிகளும் இந்த வகையில் போட்டியற்ற சிறப்புடையவை என்பதில் ஐயமில்லை. உலகின் மற்றப் பண்டை மொழிகளோ அல்லது மொழிகளோ, எதுவும் ஒரு பொருட் பல சொல் வளத்தில் அவற்றின் முன் நிற்க முடியாது, அருகே வரவும் முடியாது!

க்கால மேலை உலக, கீழை உலக